Monday, 23 February 2015

மூத்த பதிவர் திருமதி ருக்மணி சே ஷசாயி அவர்கள் வீட்டில் பதிவர் சந்திப்பு...


பரமபத நாதன் பள்ளி கொண்டிருக்கும் ஊரில் ஒரு பாங்கான பதிவர் மாநாடு. இதற்கான காரண கர்த்தா 'செல்வக் களஞ்சிய'மான திருமதி ரஞ்சனி நாராயணனுக்குதான் நன்றி  சொல்ல வேண்டும். அவர் வருகை இந்த சந்திப்பிற்கான காரணம்....இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியவர் நம் பதிவுலக பிரம்மா திரு கோபு சார்!

திரு கோபு சார் அவர்களைத் தவிர நேரில் பார்க்காத மற்ற திருச்சி பதிவர்களின் எழுத்தில் மட்டுமே இருந்த பரிச்சயம் அவர்களை நேரில் பார்க்கும் ஆவலையும் ஏற்படுத்தியது. திருமதி ரஞ்சனியின் ஏற்பாட்டின்படி நாங்கள் அனைவரும், பல வருடங்களாக கதை, கட்டுரைகள், சின்னக் குழந்தைகளுக்கான கதைகளை எழுதி, புத்தகங்களை வெளியிட்டு வரும் திருமதி ருக்மணி சே ஷசாயியின் வீட்டில் சந்திப்பதாக முடிவு செய்தோம். திரு கோபு சார், திரு தமிழ் இளங்கோ சாருடன் நானும் பதிவர்களின் முகம் காண புறப்பட்டேன்! சரியாக நான்கரை மணிக்கு நாங்கள் ருக்மணி மாமியின் வீட்டை அடைய, பின்னால் வந்த திருமதி கீதா சாம்பசிவம், திருமதி ஆதி வெங்கட், செல்வி ரோஷிணி அனைவரும் இணைந்து சென்றோம். ஏற்கெனவே வந்திருந்த திரு ரிஷபன் சாருடன் இணைந்து மாமி எங்களை அன்புடன் வரவேற்றார்.

திரு கோபு சாரும், கீதா மாமியும் கொடுத்த இனிப்புகளை சாப்பிட்டுக் கொண்டே அனைவரும் பொதுவாக பேசிக் கொண்டிருக்க, ஆரம்பித்தது Speech Session! அவரவரைப் பற்றிய அறிமுகம்....வீடு, குடும்பம் இப்படி பொதுவான பேச்சுக்கள்! திரு ரிஷபன் சார்  மிக அமைதியாக இருந்தார்.....நிறைகுடம் தளும்பாதே! அவ்வப்போது நகைச்சுவை கமெண்ட்டுகளை மட்டுமே அவர் வாயிலிருந்து உதிர்ந்தது!! திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தியும், திரு மாலி அவர்களும் வந்தனர். திரு மாலி அவர்கள் ஒரு அஷ்டாவதானி என்பதைக் கேட்டபோது, அவர் திறமை ஆச்சரியப் படுத்தியது.

பதிவர் சந்திப்புக்கு பிள்ளையார் சுழி போட்ட ரஞ்சனி அவர் துணைவருடன் வர, அங்கு உற்சாகம் களைகட்டியது! ரஞ்சனியுடன் ஃ போனிலும், ஈமெயில் மூலமுமே பேசியதுண்டு. அவரை நேரில் பார்த்தது மிக  சந்தோஷமாக இருந்தது. எனக்கு அங்கிருந்த அனைவருமே புதியவர்கள். ருக்மணி மாமிக்கு  அனைவரும் தம்பதியாக வரவில்லையே என்ற  வருத்தம். 
திருமதி ரஞ்சனி ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரித்து அறிந்து கொண்டார். அடுத்த பதிவர் சந்திப்பிற்கு தன் வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார் திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி. சோலை போன்ற தோட்டத்துடன் இருக்கும் அவரது வீட்டுக்கு, கண்டிப்பாக சென்று ரசிக்க வேண்டும். அவர் மயில், பாம்பு எல்லாம் கூட வளர்ப்பதாக கூடுதல் தகவல் தந்தார் திரு ரிஷபன் சார்! கோபு சார்....அடுத்த சந்திப்பை திரு ராமமூர்த்தி சார் வீட்டில் அரேஞ்ச் பண்ணிடுங்கோ!!
அடுத்து கைக்கும், கண்ணுக்குமான Photo Session !பெண் பதிவர்களான நாங்களே மெஜாரிட்டியாக இருக்க, அனைவரையும்  புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தார் நம் புகைப்படக் கலைஞர் திரு கோபு சார்!! அவருக்கு உதவியாக திரு தமிழ் இளங்கோ சார்!! எனக்கு புகைப் படங்களை எடுத்து உதவிய ரோஷிணிக் குட்டிக்கு தேங்க்ஸ்! 

ரோஷிணி எடுத்த புகைப்படம்...

திருமதி ரஞ்சனியின் விவேகானந்தர், மலாலா, திரு ராமமூர்த்தி அவர்களின் ஆரண்ய நிவாஸ், ருக்மணி மாமியின் திருவள்ளுவர் போன்ற சிறப்பான புத்தகங்களைப் பரிசாகப் பெற்றுக் கொண்டோம் அனைவரும்.
செவிக்குணவு ஆயிற்று... வயிற்றுக்குணவு! .அடுத்து கைக்கும், வாய்க்குமான Food Session! ஆஹா..மாமி மிக அருமையாக இட்லி, போண்டா, ஸ்வீட், சாம்பார், சட்னி என்று பரிமாற, வயிறும் நிறைந்தது; மனமும் மகிழ்ந்தது. விடைபெறும்போது மாமி கொடுத்த தாம்பூலத்தைப் பெற்றுக் கொண்டோம்.


நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு.
என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கேற்ப, படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலினைப் போல, அறிவுடையாருடன்  நட்பு கொள்வது பழகப் பழக மகிழ்ச்சி தரும் அன்றோ? 

அன்றைய நல்ல  மாலைப் பொழுது, அன்பான மனிதர்களுடன், இனிமையான சந்திப்புடன், இன்பமான வார்த்தைகளுடன் இனிதே முடிவுற இணையத்தால்  இணைந்த நண்பர்கள் எங்கள் இல்லம் நோக்கிப் புறப்பட்டோம்.
 

Tuesday, 10 February 2015

பதிவுலக பிரம்மா திரு கோபு சாரின் பதிவில் நான்...

My Photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, February 4, 2015

அன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் !
மிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும்
பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின்
வருகை மிகவும் மகிழ்வளித்தது.  

29.01.2015 குருவாரம் .. வியாழக்கிழமை
மாலை 5.45 க்கு எங்கள் இல்லத்தில் 
வரவேற்பு அளித்தோம்.
பிரபல எழுத்தாளருக்குப் 
பொன்னாடை போர்த்தி வரவேற்றல்
 தம்பதி ஸமேதராய் எழுந்தருளியது 
எங்களுக்கு மேலும் மிக்க மகிழ்ச்சியளித்தது.
 திருமதி. ராதா அவர்களின் கணவர் 
திரு. பாலு அவர்கள் 
அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்றினில் 
மேலாளராகப் பணியாற்றி
ஓய்வு பெற்றவர்.

ஜாதகத்தின் அடிப்படையில் பலாபலன்கள்
சொல்வதிலும் ஆற்றல் படைத்தவர்.

இவரது ஜோதிட ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிக்க

https://scribd.com/yenbeeyes
அவர்களுடன் நாங்களும் 
 
உருவத்தில் மட்டுமல்ல ...... உள்ளத்திலும், 
பாசத்துடன் பழகுவதிலும், 
எழுத்தாற்றலிலும் 
எப்போதும் இளமையாக + இனிமையாகத் 
தோற்றமளிப்பதிலும்

மிகவும் உயர்ந்து நிற்பவர்
திருமதி. ராதாபாலு அவர்கள்.
சமீபத்தில் காசியாத்திரை சென்று வந்து
எங்களுக்கு அள்ளித்தந்துள்ள அன்பளிப்புகள் இதோ:
 ஜொலிக்கும் ஸ்ரீ லக்ஷ்மி + கணேஷ்
வழவழப்பானதோர் பிள்ளையார்
கலை நுணுக்கமான ஆசனத்தில் அமர்ந்த நிலையில் 
 
அன்னபூரணி அம்பாள்            ஸ்ரீ காசி விஸ்வநாதர் 
                     
 கங்கைச்சொம்பு                               ஸ்ரீ விஷ்ணு பாதம்
 காசி அன்னபூரணி அம்பாள் 
படியளக்கும் பரமசிவனுக்கே 
அன்னமிடும் அழகிய படம் 

 
 கலை நயம் மிக்க ஊதுபத்தி ஸ்டாண்ட் + காசிக்கயிறுகள்
                           
கலைநயம் மிக்க மிக அழகானதோர் குங்குமச்சிமிழ்
 
 பார்க்கவே பரவஸம் 
அளிக்கும் அடிபாகம் :)

[அதாவது சோழி போன்ற வடிவமைப்பில் குங்குமச் சிமிழின் அடிபாகம்]ரவிக்கைத்துணிகள், மஞ்சள், குங்குமம்
கண்ணாடி, சீப்பு முதலிய மங்கலப்பொருட்கள் NEW DIARY FOR 2015


இவர்களின் சொந்தத் தோட்டத்தில் 
விளைந்த மிகவும் ருசியான கொய்யாப்பழங்கள் !

 
 ஆஹா!  நா ஊறவைக்கும் ஜாங்கிரிகளும்
கரகரப்பான காராச்சேவும்
மற்ற அனைத்துப்பொருட்களையுமே 
தூக்கிச் சாப்பிட்டு விடும் விதமாக ! :)

புதிதாகக் காசிக்கயிறு கட்டிய என் கையில் 
ஜொலிக்கும் காசி விஸ்வநாதர்
புதிதாகக் காசிக்கயிறு கட்டிய என் கையில் 
ஜொலிக்கும் அன்னபூரணி அம்பாள் 
 
புதிதாகக் காசிக்கயிறு கட்டிய என் கையில் 
புத்தம் புதிய கங்கைச்சொம்பு

-oOo-


 

சமீபத்தில் மேற்கொண்ட புனித யாத்திரையில்
காசியில் காட்சியளிக்கும் 
தம்பதியினர்
 

புத்தகங்களைப் படிப்பதும், அறிந்தவற்றையும், 
அனுபவங்களையும் எழுதுவதும் 
திருமதி. ராதாபாலு அவர்களுக்கு 
மிகவும் பிடித்தமான விஷயங்கள்.


கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக 

இவர்கள் எழுதிய 
கதைகள், கட்டுரைகள், ஆலய தரிசனம், 
சமையல் குறிப்புகள் ஆகியவை 
பல தமிழ் இதழ்களில் 
வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.   சமீபத்திய ’தீபம்’ இதழில் இவரின் பல 
ஆன்மீகக் கட்டுரைகளும் 
’தி ஹிந்து’ தமிழ் தினசரியிலும், மங்கையர் மலரிலும் 
வேறு சில ஆக்கங்களும் வெளியாகியுள்ளன.

தமிழ் இதழ்களில் வெளியான அவற்றின் தொகுப்புக்களை தன் 

வலைப்பூக்களிலும் இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.  பேரெழுச்சியுடன் அடிக்கடி 
உலகில் உள்ள பல நாடுகளுக்குப்
பயணம் சென்று வருவதில் 
மிகுந்த ஆர்வமுள்ள தம்பதியினராக உள்ளனர் !
இதோ அதற்கு ஆதாரமான சில படங்கள்:

இந்தோனேஷியா - ’பாலி’யில் 

கம்போடியாவில்

ஜெர்மனிக் குளிரில்

லண்டன் பாலம் அருகே

மலேசியாவில் 


’ பாரிஸ்’  இல்
 ’ரோம்’ இல் 

சிங்கப்பூரில்  

லண்டன் வாக்ஸ் மியூசியத்தில் 
'ஸ்விஸ்' நாட்டில்
 பாங்காக் - தாய்லாந்தில்
பளிச்சென்ற தோற்றத்தில் !


கேரளாவில்

பேத்தியுடன்

 பசுமையான 
நினைவுகளில் !

 பூக்களுடன் தானும் 
ஓர் பூவாகவே !


உல்லாசமாகப் 
படகுப் பயணத்தில் 


 
செல்லமான பேத்தியுடன் !

பாட்டியின் அலங்காரங்களில் சொக்கிப்போய்
கன்னத்தில் எவ்ளோ அழகாக ஸ்டைலாகக் 
கை வைத்துக்கொண்டுள்ளது பாருங்கோ !
பேரக்குழந்தைகளுடன் 
உற்சாகமாக ஊஞ்சலில்


சஷ்டியப்த பூர்த்தி விழாவில் !
உன்னதமான இந்த உத்தம தம்பதியினருக்கு 
மூன்று பிள்ளைகளும் ஒரு பெண்ணுமாக 
மொத்தம் நான்கு வாரிசுகள். 

அனைவருக்கும் திருமணமாகி 
இவர்கள் பேரன் பேத்திகள் எடுத்தாச்சு!

ஜெர்மனி, 
சிங்கப்பூர், 
சென்னை, 
மும்பையில் 
அவர்கள்.

அடிக்கடி இங்குமங்கும் 
பயணம் செய்துகொண்டு
திருச்சியில் ஜாலியாக இவர்கள் ! :)

 

பதிவுலகில் நம் 
திருமதி. ராதாபாலு அவர்களின் 
சமீபத்திய சாதனைகள்
திருமதி. ராதாபாலு அவர்கள்.

வலைத்தளங்கள்: 


” எண்ணத்தின் வண்ணங்கள் ”


“அறுசுவைக் களஞ்சியம் ”


“ என் மன ஊஞ்சலில் “


சென்ற ஆண்டு என் வலைத்தளத்தினில் நான் நடத்திய 

‘சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ மூலம் மட்டுமே 

எனக்கு இவர்கள் அறிமுகம் ஆனார்கள்.இப்போது நாங்கள் குடும்ப நண்பர்களாகிவிட்டதில் 

எங்கள் இருவருக்குமே மிகவும் மகிழ்ச்சி.VGK-07, VGK-08, VGK-10, VGK-11, VGK-12, 

VGK-14, VGK-17, VGK-18, VGK-27, 

VGK-28 and VGK-33 

ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்று

நான்கு முதல் பரிசுகள், 

நான்கு இரண்டாம் பரிசுகள், 

மூன்று மூன்றாம் பரிசுகள்

வென்றுள்ளார்கள்.
                                                                   http://gopu1949.blogspot.in/2014/08/vgk-21-to-vgk-30.html

                                                                   http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html
தனக்குத்தானே நீதிபதி போட்டியிலும் 

மிகச்சரியாக விடை எழுதி 

பரிசினைப் பகிர்ந்து கொண்டார்கள்
இவருக்கு நம் போட்டிகளில்

’கீதா விருது’ 

வழங்கப்பட்டுள்ளது.
VGK-10, VGK-11 and VGK-12

தொடர் வெற்றிக்காக

ஹாட்-ட்ரிக் பரிசும் அளிக்கப்பட்டுள்ளது.திருமதி. ராதாபாலு அவர்களை 


நான் கடந்த நான்கு மாதங்களில்


மூன்று முறைகள் நேரில் 


சந்தித்திருக்கிறேன்.


முதல்முறை அவர்கள் வீட்டு


நவராத்திரி கொலுவுக்கு 


எங்களை அழைத்தபோது30.09.2014
இவர்களின் வீட்டை படுசுத்தமாகப் 

பளிச்சென்று பராமரித்து

மிக அழகாக வைத்திருந்தார்கள்.


அதைக்கண்ட என் கண்களுக்கும் மனதுக்கும் 

மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


{ அந்த  மிக ரம்யமான சூழலிலிருந்து புறப்பட்டு வரவே எனக்குத் தோன்றவில்லை .

இதனாலேயே அவர்களை என் இல்லத்திற்கு அழைக்க நான் மிகவும் தயங்கினேன். }


அழகியலும் அறிந்துள்ள 


மிகவும் பொறுப்பான 


குடும்பத்தலைவி ! :)


இரண்டாம் முறை பொதுவான ஓரிடத்தில்


எதிர்பாராததோர் சந்திப்பு 


எங்களுக்குள்  நிகழ்ந்தது16.01.2015மூன்றாம் முறை 


29.01.2015 


எங்கள் இல்லத்திற்கே


நேரில் வந்திருந்தார்கள்.


 
ஒவ்வொருமுறை நான் இவர்களை சந்திக்கும்போதும் 

ஒரு 10 வயது குறைந்ததுபோலக் காட்சியளிப்பதே

இவர்களின் ஸ்பெஷாலிடியாகவும்

எனக்கு ஒரே ஆச்சர்யமாகவும் 

அதே சமயம் மிகவும் சந்தோஷமாகவும் உள்ளது. :) இவ்வாறான இவர்களின் 

இளமையின் இரகசியத்தை இவர்கள்

தனிப்பதிவாக வெளியிட்டால்

நம்மில் பலருக்கும் பயன்படக்கூடும் :)


 


அன்பின் ராதாபாலு,
எங்கள் இல்லத்திற்கு 

தங்களின் அன்பான வருகைக்கும்,

மிகவும் இனிமையாக நாம் 

மனம் விட்டுப் பேசி மகிழ முடிந்ததற்கும்

எங்கள் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.இன்றுபோல என்றுமே சந்தோஷமாக 

சிரித்த முகத்துடன் கலகலப்பாக இருங்கோ !


என்றும் அன்புடன் தங்கள்


கோபு
 
 
 
 
கோபு சார்....தங்களின் பதிவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்....