Wednesday 11 March 2015

ஸ்திரீ தர்மம் பற்றி மகா பெரியவர் வாக்கில்....

ஸ்திரீகளின் ஒரே வைதிகச் சொத்து  ஒளபாஸனம் எல்லா ஜாதியாருக்கும் உண்டு என்றேன். அதே போல் ஒளபாஸனம் ஆண்-பெண் இருவருக்கும், பதி-பத்தினி இரண்டு பேருக்கும் சேர்ந்த பொதுக் காரியமாய் இருக்கிறது.

பதி கிருஹத்திலிருக்கும் போது அவனோடு கூடச் சேர்ந்து பத்தினியும் ஒளபாஸனம் பண்ணுகிறாள். அவன் ஊரிலில்லா விட்டாலும் ஒளபாஸனாக்னியில் ஹோமம் பண்ண வேண்டிய அக்ஷதைகளை அதில் பத்தினியே போட வேண்டும். அந்த ரைட் அவளுக்கு வேதத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிற்பாடு வந்த பௌராணிகமான விரதங்கள், பூஜைகள் இவைகளைச் சேர்க்காமல் சுத்த வைதிகமாகப் பார்த்தால், ஒளபாஸனத்தைத் தவிர ஸ்திரீக்குச் சொந்தமாக எந்த வேத கர்மாவும் இல்லை. புருஷன் பண்ணுகிறதிலெல்லாம் automatic -ஆக இவளுக்கு share கிடைத்து விடுகிறது. ஆகவே, ‘இவள் கிருஹரக்ஷணை தவிர தனியாக எந்த தர்மமும், கர்மமும் பண்ண வேண்டாம். பண்ணினாலும் ஒட்டாது என்று தான் வைதிகமான தர்ம சாஸ்திரத்தில் இருக்கிறது. ஒரே exception [விதி விலக்கு] ஒளபாஸனம்.

ஆகையால் ‘ரைட்’ ‘ரைட்’ என்று கேட்கிற ஸ்திரீகளை இந்த விஷயத்தில் கிளப்பிவிட்டாவது வீட்டுக்கு வீடு ஒளபாஸனாக்னி ஜ்வலிக்கும்படிச் செய்யலாமோ என்று எனக்கு ஆசை. 

ஒளபாஸனம் செய்யாத புருஷனிடம் பத்தினியானவள், “உங்களுக்குக் கொஞ்சமாவது வேத ஸம்பந்தம் இருக்கும்படியாக, (நீங்கள் வைதிகமான பாக்கியெல்லாவற்றையும் விட்டுவிட்டாலும்) வேத மந்திரமான காயத்ரீயாவது பண்ணுகிறீர்கள். இப்போது பண்ணாவிட்டாலும், மந்திரமே மறந்து போயிருந்தாலும்கூட, பின்னாலாவது என்றைக்காவது பச்சாதாபம் ஏற்பட்டால் காயத்ரீ பண்ணுவதற்கு அநுகூலமாக உங்களுக்கு உபநயன ஸம்ஸ்காரமாவது ஆகியிருக்கிறது. எனக்கோ உபநயனமும் இல்லை, காயத்ரீயும் இல்லை. நம் மதத்துக்கே, லோகத்துக்கே, ஸ்ருஷ்டிக்கே ஆதாரமாக இருக்கப்பட்ட வேதத்தில் ஸ்திரீயான எனக்கு ஏதாவது ‘ரைட்’ இருக்குமானால் அது இந்த ஒளபாஸனம்தான். நீங்கள் இதுவும் செய்யாவிட்டால் எனக்கு வேத ஸம்பந்தம் அடியோடு போய் விடுகிறதல்லவா?” என்று சண்டை போட்டு அவனை ஒளபாஸனம் ப‌ண்ண வைக்க வேண்டும். இந்த மஹா பெரிய சொத்துரிமைக்குத்தான் பெண்கள் சண்டை போட வேண்டும்.

தெய்வத்தின் குரல்

ஸ்திரீகளின் ஒரே வைதிகச் சொத்து

ஒளபாஸனம் எல்லா ஜாதியாருக்கும் உண்டு என்றேன். அதே போல் ஒளபாஸனம் ஆண்-பெண் இருவருக்கும், பதி-பத்தினி இரண்டு பேருக்கும் சேர்ந்த பொதுக் காரியமாய் இருக்கிறது.

பதி கிருஹத்திலிருக்கும் போது அவனோடு கூடச் சேர்ந்து பத்தினியும் ஒளபாஸனம் பண்ணுகிறாள். அவன் ஊரிலில்லா விட்டாலும் ஒளபாஸனாக்னியில் ஹோமம் பண்ண வேண்டிய அக்ஷதைகளை அதில் பத்தினியே போட வேண்டும். அந்த ரைட் அவளுக்கு வேதத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிற்பாடு வந்த பௌராணிகமான விரதங்கள், பூஜைகள் இவைகளைச் சேர்க்காமல் சுத்த வைதிகமாகப் பார்த்தால், ஒளபாஸனத்தைத் தவிர ஸ்திரீக்குச் சொந்தமாக எந்த வேத கர்மாவும் இல்லை. புருஷன் பண்ணுகிறதிலெல்லாம் automatic -ஆக இவளுக்கு share கிடைத்து விடுகிறது. ஆகவே, ‘இவள் கிருஹரக்ஷணை தவிர தனியாக எந்த தர்மமும், கர்மமும் பண்ண வேண்டாம். பண்ணினாலும் ஒட்டாது என்று தான் வைதிகமான தர்ம சாஸ்திரத்தில் இருக்கிறது. ஒரே exception [விதி விலக்கு] ஒளபாஸனம்.

ஆகையால் ‘ரைட்’ ‘ரைட்’ என்று கேட்கிற ஸ்திரீகளை இந்த விஷயத்தில் கிளப்பிவிட்டாவது வீட்டுக்கு வீடு ஒளபாஸனாக்னி ஜ்வலிக்கும்படிச் செய்யலாமோ என்று எனக்கு ஆசை. ஒளபாஸனம் செய்யாத புருஷனிடம் பத்தினியானவள், “உங்களுக்குக் கொஞ்சமாவது வேத ஸம்பந்தம் இருக்கும்படியாக, (நீங்கள் வைதிகமான பாக்கியெல்லாவற்றையும் விட்டுவிட்டாலும்) வேத மந்திரமான காயத்ரீயாவது பண்ணுகிறீர்கள். இப்போது பண்ணாவிட்டாலும், மந்திரமே மறந்து போயிருந்தாலும்கூட, பின்னாலாவது என்றைக்காவது பச்சாதாபம் ஏற்பட்டால் காயத்ரீ பண்ணுவதற்கு அநுகூலமாக உங்களுக்கு உபநயன ஸம்ஸ்காரமாவது ஆகியிருக்கிறது. எனக்கோ உபநயனமும் இல்லை, காயத்ரீயும் இல்லை. நம் மதத்துக்கே, லோகத்துக்கே, ஸ்ருஷ்டிக்கே ஆதாரமாக இருக்கப்பட்ட வேதத்தில் ஸ்திரீயான எனக்கு ஏதாவது ‘ரைட்’ இருக்குமானால் அது இந்த ஒளபாஸனம்தான். நீங்கள் இதுவும் செய்யாவிட்டால் எனக்கு வேத ஸம்பந்தம் அடியோடு போய் விடுகிறதல்லவா?” என்று சண்டை போட்டு அவனை ஒளபாஸனம் ப‌ண்ண வைக்க வேண்டும். இந்த மஹா பெரிய சொத்துரிமைக்குத்தான் பெண்கள் சண்டை போட வேண்டும்.

Life....

Prayer...

Without God...