ஸ்திரீகளின் ஒரே வைதிகச் சொத்து ஒளபாஸனம் எல்லா ஜாதியாருக்கும் உண்டு என்றேன். அதே போல் ஒளபாஸனம் ஆண்-பெண்
இருவருக்கும், பதி-பத்தினி இரண்டு பேருக்கும் சேர்ந்த பொதுக் காரியமாய்
இருக்கிறது.
பதி
கிருஹத்திலிருக்கும் போது அவனோடு கூடச் சேர்ந்து பத்தினியும் ஒளபாஸனம்
பண்ணுகிறாள். அவன் ஊரிலில்லா விட்டாலும் ஒளபாஸனாக்னியில் ஹோமம் பண்ண
வேண்டிய அக்ஷதைகளை அதில் பத்தினியே போட வேண்டும். அந்த ரைட் அவளுக்கு
வேதத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது.
பிற்பாடு வந்த பௌராணிகமான
விரதங்கள், பூஜைகள் இவைகளைச் சேர்க்காமல் சுத்த வைதிகமாகப் பார்த்தால்,
ஒளபாஸனத்தைத் தவிர ஸ்திரீக்குச் சொந்தமாக எந்த வேத கர்மாவும் இல்லை.
புருஷன் பண்ணுகிறதிலெல்லாம் automatic -ஆக இவளுக்கு share கிடைத்து
விடுகிறது. ஆகவே, ‘இவள் கிருஹரக்ஷணை தவிர தனியாக எந்த தர்மமும், கர்மமும்
பண்ண வேண்டாம். பண்ணினாலும் ஒட்டாது என்று தான் வைதிகமான தர்ம
சாஸ்திரத்தில் இருக்கிறது. ஒரே exception [விதி விலக்கு] ஒளபாஸனம்.
ஆகையால் ‘ரைட்’ ‘ரைட்’ என்று கேட்கிற ஸ்திரீகளை இந்த விஷயத்தில்
கிளப்பிவிட்டாவது வீட்டுக்கு வீடு ஒளபாஸனாக்னி ஜ்வலிக்கும்படிச் செய்யலாமோ
என்று எனக்கு ஆசை.
ஒளபாஸனம் செய்யாத புருஷனிடம் பத்தினியானவள்,
“உங்களுக்குக் கொஞ்சமாவது வேத ஸம்பந்தம் இருக்கும்படியாக, (நீங்கள்
வைதிகமான பாக்கியெல்லாவற்றையும் விட்டுவிட்டாலும்) வேத மந்திரமான
காயத்ரீயாவது பண்ணுகிறீர்கள். இப்போது பண்ணாவிட்டாலும், மந்திரமே மறந்து
போயிருந்தாலும்கூட, பின்னாலாவது என்றைக்காவது பச்சாதாபம் ஏற்பட்டால்
காயத்ரீ பண்ணுவதற்கு அநுகூலமாக உங்களுக்கு உபநயன ஸம்ஸ்காரமாவது
ஆகியிருக்கிறது. எனக்கோ உபநயனமும் இல்லை, காயத்ரீயும் இல்லை. நம்
மதத்துக்கே, லோகத்துக்கே, ஸ்ருஷ்டிக்கே ஆதாரமாக இருக்கப்பட்ட வேதத்தில்
ஸ்திரீயான எனக்கு ஏதாவது ‘ரைட்’ இருக்குமானால் அது இந்த ஒளபாஸனம்தான்.
நீங்கள் இதுவும் செய்யாவிட்டால் எனக்கு வேத ஸம்பந்தம் அடியோடு போய்
விடுகிறதல்லவா?” என்று சண்டை போட்டு அவனை ஒளபாஸனம் பண்ண வைக்க வேண்டும்.
இந்த மஹா பெரிய சொத்துரிமைக்குத்தான் பெண்கள் சண்டை போட வேண்டும்.
ஔபாஸனம்- என்றால் என்ன?
ReplyDeleteஇச் சொல் சமஸ்கிருதம் எனக் கருதுகிறேன்.
தமிழர்கள் எல்லோருக்கும் சமஸ்கிருதம் புரியாது, தெரியாதென்பது பெரியவருக்குத் தெரியாதா?
அவர் சொல்வது சமஸ்கிருதம் தெரியாதவருக்குத் தேவையில்லை எனக் கருதுகிறாரா?
ஒளபாசனம் என்றால் என்ன? காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல். ஒருகாலத்தில் இல்லறத்தில் ஈடுபட்டுள்ள எல்லாப் பெருமானரும் தங்கள் வீட்டில் வேள்வித் தீ வளர்த்தே ஆகவேண்டும்; அவர்கள் வீட்டு அடுப்பாங்கரையில் கங்கு கனன்று கொண்டே இருக்கும். இப்பொழுது, இதையெல்லாம் பின்பற்றுபவர்கள் அரிதிலும் அரிது.
Deleteவேள்வித் தீயைக் காப்பாற்றுதலை தீ ஓம்புதல் என்று தமிழில் சொல்லுவார்கள். ஓம்பாயனம் என்பது தமிழ்வினையைச் சங்கத ஈறு கொண்டு முடிக்கும் ஒரு பெயர்ச்சொல்.
காப்பற்றுதல் என்ற தொழிற்பெயரை உணர்த்தும். ஓம்பாயனம்>ஓம்பாசனம் ஆகி பெரும்பாலான தமிழர்கள் மெல்லின ஓசையை அவ்வப்போது பேச்சுவழக்கில் ஒலிக்காமற் போவது போல, ஓம்பாசனம்>ஓபாசனம் ஆகிப் பின் மேலும் திரிந்து ஔபாசனம் ஆகும்.
(மேலே கூறியவற்றுள் எத்தனை தமிழ் வார்த்தைகள் தமிழர்களுக்குப் புரியும், தெரியும்?)
ஔபசனா என்றால் சமஸ்கிருதம். ஔபாசனம் என்பது தமிழில் உபயோகத்தில் உள்ள ஒரு சொல். எப்படி நாம் பல பிற மொழிச் சொற்களை தமிழ் மொழியாகக் கருதி பேசி வருகிறோமோ அப்படித்தான் இதுவும் - குடும்பம், தைர்யம், சந்திரன், ரேடியோ என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
பாரிசில் வசிப்பவர் எல்லோருக்கும் ஆங்கிலமோ அல்லது ஜெர்மானிய மொழியோ தெரியாது போலும்!
தமிழில் எல்லோருக்கும் சமஸ்கிருதம் புரியாது அல்லது தெரியாது என்று ஏதாவது கணக்கெடுப்பு வந்திருந்தால் தெரிந்து கொள்வது நல்லது!
நான் வங்கியில் பணிபுரிந்தவன். என்னை தமிழ் நாட்டிலிருந்து, வடக்கே ஒரு ஊருக்கு உயர் பதவி கொடுத்து மாற்றி விட்டார்கள். எனக்கு இந்தி சுத்தமாகத் தெரியாது. எப்படியோ தட்டுத் தடுமாறி ஊர் போய்ச் சேர்ந்து, முதல் நாள் அலுவலகம் சென்று மேலதிகாரியிடம் என்னுடைய பணி மாற்றம் கடிதத்தைக் கொடுத்தேன். அவர் ஆங்கிலத்தில் என்னுடன் உரையாடினார். திடீரென்று இந்தியில் "கின் கின் டெபார்ட்மென்ட் மெம் ஆப்னே காம் கியா ஹை" (இதை நான் இப்பொழுது இந்தி நன்றாகத் தெரிந்து கொண்டுள்ளபடியால் எழுதுகிறேன்). நான் அவர் பக்கத்தில் யாரோ ஒருவர் நின்று கொண்டிருந்தபடியால் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று எண்ணி, உட்கார்ந்திருந்தேன். அதன் பின்னர், தொடர்ந்து வேலை செய்து வரும்பொழுதும் சக ஊழியர்கள் என்னிடம் அடிக்கடி இந்தியில்தான் ஏதாவது கூறுவார்கள். எனக்கு இந்தி தெரியாது என்பது அவர்களுக்குத் தெரிந்தும் அவர்கள் தொடர்ந்து இந்தியிலேயே பேசி வந்தார்கள். எனவே அவர்கள் சொன்னது எனக்குத் தேவையில்லை என்று நான் எடுத்துக் கொள்ள முடியுமா?
தாங்கள் எழுதியிருக்கும் பின்னூட்டத்திற்கு பதில் எனக்கு பக்கம் பக்கமாக எழுத வேண்டும் போல் உள்ளது. ஆனால் பிறருடைய வலைத்தளமாதலால் இத்துடன் நிறைவு செய்து கொள்கிறேன்.
நேரம் இருந்தால் மகாபெரியவர்களுடைய புத்தகங்களை படித்தால் மேலே கூறிய வினாக்களுக்கு தகுந்த விளக்கவுரை நிச்சயமாகக் கிடைக்கும். இந்த ஔபாசனத்தைப் பற்றிய முழு விளக்கமும்கூட கிடைக்கும்.
அருமை... நன்றி...
ReplyDeleteThanks Mr.Dhanabalan...
Delete