Thursday 6 March 2014

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

உலக மகளிர் தினம் மார்ச் 8ம் தேதியன்று எல்லா நாடுகளிலும் கொண்டாடப் படுகிறது. உலகப்பெண்கள் தம் உரிமையை நிலைநாட்டிக் கொள்ள,ஆண்களுக்கு சமமான தகுதிகளைப் பெற போராடி அவற்றைப் பெற்ற நாளே மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.


1908ம் ஆண்டுசுமார் 15,000 பெண்கள் நியுயார்க் நகரில் தங்கள் உரிமைகளைக் கோரி,குறைந்த வேலை நேரம், அதிகபட்ச சம்பளம், வாக்குரிமை  இவற்றிற்காக போராட்டம் நடத்தினர்.

1909ம் ஆண்டு அமெரிக்க அரசு பிப்ரவரி 28ம் நாளை மகளிர்  தினமாக அறிவித்தது. 1910ம் ஆண்டில் கிளாரா ஜெட்சின் என்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண்ணால் அகில உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டனர்.

1913ம்  ஆண்டு முதல் உ.ம.தினம் மார்ச் மாதம் 8ம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டு, அதுவரை அமெரிக்கா, ஐரோப்பாவில் மட்டும் அனுசரிக்கப்பட்ட மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. 1914ல் ஐரோப்பிய பெண்களும்,1917ல் ரஷ் யப் பெண்களும் உலகப் போரை எதிர்த்து குரல் எழுப்பினர்.

1975ம் ஆண்டை அமெரிக்கா  'உலக மகளிர் ஆண்டாக' நிர்ணயித்தது. அதுமுதல் பெண்களின் பங்கு பல விதங்களிலும் மேன்மை பெற்றது. ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் எல்லாவற்றிலும் பங்கு கொள்ளும் நிலை ஏற்பட்டது. பெண்களின் மதிப்பும்,மரியாதையும் அதிகரித்தது. பல நாடுகளில் மார்ச் 8ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. பெண்களின் திறமைகளும்,சாதனைகளும் எங்கும் பேசப்பட்டன.

பெண் மருத்துவர்கள், பெண் பிரதமர்கள், விமான ஓட்டிகள்,  விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்கள்,  விண்வெளி
உலக மகளிர் தினம் மார்ச் 8ம் தேதியன்று எல்லா நாடுகளிலும் கொண்டாடப் படுகிறது. உலப்பெண்கள் தம் உரிமையை நிலைநாட்டிக் கொள்ள,ஆண்களுக்கு சமமான தகுதிகளைப் பெற போராடி அவற்றைப் பெற்ற நாளே மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

1908ம் ஆண்டுசுமார் 15,000 பெண்கள் நியுயார்க் நகரில் தங்கள் உரிமைகளைக் கோரி,குறைந்த வேலை நேரம், அதிகபட்ச சம்பளம், வாக்குரிமை  இவற்றிற்காக போராட்டம் நடத்தினர்.

1909ம் ஆண்டு அமெரிக்க அரசு பிப்ரவரி 28ம் நாளை மகளிர்  தினமாக அறிவித்தது. 1910ம் ஆண்டில் கிளாரா ஜெட்சின் என்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண்ணால் அகில உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டனர்.

1913ம்  ஆண்டு முதல் உ.ம.தினம் மார்ச் மாதம் 8ம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டு, அதுவரை அமெரிக்கா, ஐரோப்பாவில் மட்டும் அனுசரிக்கப்பட்ட மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. 1914ல் ஐரோப்பிய பெண்களும்,1917ல் ரஷ் யப் பெண்களும் உலகப் போரை எதிர்த்து குரல் எழுப்பினர்.

1975ம் ஆண்டை அமெரிக்கா  'உலக மகளிர் ஆண்டாக' நிர்ணயித்தது. அதுமுதல் பெண்களின் பங்கு பல விதங்களிலும் மேன்மை பெற்றது. ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் எல்லாவற்றிலும் பங்கு கொள்ளும் நிலை ஏற்பட்டது. பெண்களின் மதிப்பும்,மரியாதையும் அதிகரித்தது. பல நாடுகளில் மார்ச் 8ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. பெண்களின் திறமைகளும்,சாதனைகளும் எங்கும் பேசப்பட்டன.

பெண் மருத்துவர்கள், பெண் பிரதமர்கள், விமான ஓட்டிகள்,  விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்கள்,  விண்வெளி வீரர்கள், விளையாட்டு வீராங்கனைகள்....அப்பப்பா அத்தனையிலும் கால் பதித்து பெருமை சேர்த்த பெண்கள்  ஆண்களுக்கு இணையான உரிமைகளைப் பெற்றுவிட்டார்களா? தலை உயர்த்தி நம்மால் 'ஆம்'என்று சொல்ல முடியவில்லையே?

சித்தாள் வேலை செய்யும் சின்னம்மாவானாலும், சினிமாவில் நடிக்கும் ஐஸ்வர்யாராயாக இருந்தாலும் சம்பளம் என்னவோ அவர்களுடன் கூட வேலை செய்யும் ஆண்களைவிடக் குறைவுதானே? பின் எப்படி இது ஆணும்,பெண்ணும் சமமென்று ஆகும்?


நாளுக்கு நாள் நம் நாட்டில் நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் நம் தலையைத் தாழத்தான் செய்கின்றன.நான் சென்ற  ஜெர்மனிக்கு என் மகன் வீட்டுக்கு சென்ற சமயம் அங்கு தொலைக்காட்சியில் நம் நாட்டில் நடந்த 'கேங்க் ரேப்' பற்றி ஒரு செய்தி  வந்தபோது   வருத்தமாகவும்,அதிர்ச்சியாகவும் இருந்தது. 
அதன்பின்  ஜனவரியில்  ஒரு வாரம் லண்டன் சென்றிருந்தேன். அந்த நாட்டு தினசரிகளில் நம் இந்தியச் செய்தி இருக்கிறதா என்று தேடியபோது,என் கண்ணில் பட்ட செய்தி நம் நாட்டில் மேற்கு வங்கத்தில் நடந்த கற்பழிப்பு செய்தி. இன்னொரு தினசரியில் மத்திய அமைச்சர் சஷி தரூரின் மனைவி தற்கொலை. மறுநாள் இன்னொரு பலாத்காரச் செய்தி. நான் இருந்த ஒரு வாரத்தில் நம் நாட்டைப் பற்றிய செய்திகள் இவையே. பொருளாதாரம்,விஞ்ஞானம்,இவற்றில் முன்னேறிய நாடாக விளங்கும் நம் நாட்டில் வேறு செய்திகளே  இல்லையா?











இந்த எண்ணம் என் மனதின் அடியில் ஓடிக்கொண்டே இருந்தது.அதற்கு பதில் கிடைத்ததைப் போல பிப்ரவரி 15ம் தேதி 'குமுதம் சிநேகிதி' இதழில்  ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. இந்தியாவின் மிகச் சிறந்த பத்திரிகையாளரும், ஆடிட்டருமான திரு S.குருமூர்த்தி அவர்களின் 'உலகுக்கே வழிகாட்டும் பாரதப் பெண்மை'என்ற தலைப்பிட்ட கட்டுரை. அவர் அதில் எழுதியுள்ள செய்தியை  சுருக்கமாக எழுதியுள்ளேன்.


 ஜெர்மனியைச் சேர்ந்த மரியா விர்த் என்ற மனோதத்துவம் படித்த பெண்மணி   சில ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்து நம் இந்திய பண்பாடு, கலாச்சாரத்தால் பெரிதும் கவரப் பட்டவர் அவர் 'இந்தியாவில் நடக்கும் கற்பழிப்புகள் பற்றி உலக நாடுகள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பது பற்றி  எழுதியுள்ள கட்டுரையில் ' தினமும் உலகில் பல நாடுகளில்,பல கற்பழிப்புகள் நடந்தாலும் இந்திய  நாட்டைப் பற்றி மட்டும் இப்படி எழுதி ஏன் கேவலப்படுத்துகின்றன?அமெரிக்காதான்  உலகில் கற்பழிப்பில் முதல் நாடாகத் திகழ்கிறது.
ஜெர்மனைச் சேர்ந்த திருமதி மரியா விர்த்


ஆனால் இந்திய நாட்டின் ஆண்கள் எல்லா மூலை முடுக்குகளிலும் பெண்களை  வேட்டையாட பதுங்கி இருக்கிறார்கள் என்பது போல செய்திகள் வருவது ஏன்? பாரதநாட்டில் நடக்கும் கற்பழிப்பு செய்திகள் பற்றி அதிக செய்திகள் வர ஆரம்பித்தது 2012ல் தில்லியில் நடந்த கற்பழிப்பிற்கு பின்புதான். இதற்குக் காரணம் இதனை எதிர்த்து மக்கள் வெகுண்டு எழுந்து தெருவில் கிளர்ச்சி செய்ததால்தானே? இதன் பொருள்  தம் கலாச்சாரத்திற்கு இது ஒவ்வாதது என்பதுதானே? வேறு எந்த நாட்டிலும் இப்படி எதிர்ப்பு தெரிவிப்பதில்லையே? ஆனால் இந்தியாவுக்கு சாதகமாக வேண்டிய விஷ யமே இன்று பாதகமாக மாறி, இந்தியாவில்தான் கற்பழிப்பு மிக அதிகம் என்ற பெயர் ஏற்பட்டுவிட்டதே' என்று மனம் குமுறி எழுதியுள்ளார் மரியா விர்த்.

'அவர் எழுதியது இருக்கட்டும். நம் நாட்டு பத்திரிக்கை ஆசிரியர்கள்,தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஏன் இப்படி எழுதுவதில்லை'என்கிறார் திரு குருமூர்த்தி.
திரு குருமூர்த்தி 


'இங்கு கற்பழிப்பு மிகப் பெரிய தவறு; இங்கு பெண்களுக்கு மரியாதை அதிகம்.அதனால் இது போன்று நடந்தால் நாடாளுமன்றமே ஸ்தம்பிக்கும் அளவு மக்கள் போராடுவார்கள். சட்டம்,ஒழுங்கு சீராகவும், பெண்களுக்கு அதிக உரிமையும் உள்ள வெளிநாடுகளில் பாலியல் கொடுமைகள் மிக அதிகம். அவர்கள் அதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.
'சட்டத்தால் மரியாதையை உண்டு பண்ண முடியாது. கலாசாரம் மட்டுமே மரியாதையை உருவாக்க முடியும். சமுதாயம்தான் அந்த மரியாதைக்கு பாதுகாப்பு கொடுக்கும். சமுதாயக் கண்காணிப்பு இல்லாத இடங்களில் (தில்லியைப் போல் நள்ளிரவிலோ,மும்பையைப் போல் ஒதுக்குப் புறத்திலோ) பாலியல் தவறுகள் பெரும்பாலும் நடக்கின்றன.

'நவீன பெண்ணுரிமை இயக்கத்தினர் 'நாங்கள் எங்கு வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் போவோம். ஆனால் அங்கு தவறு நடந்தால் அது சமுதாய சீர்கேடு' என்கின்றனர்.சமுதாயத்தின் கண்காணிப்பிலிருந்து விலகிப் போனால்தான் இது போன்ற கொடுமைகள் நடக்கிறது என்பதை அவர்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை?பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் ஏன் ஏற்கவில்லை?


'பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். கண்ணியமாக உடை அணிய வேண்டும் என்று வலியுறுத்திப் பேசிய மகாரா ஷ்டிர மாநில மகளிர் கமிஷ ன் உறுப்பினர் 'ஆ ஷா  மிராகே' கூறியது சரியல்ல என்று நம் நாட்டு பத்திரிகைகளும், தொலைக் காட்சிகளும் சாடுகின்றன.பொறுப்பற்ற உரிமையால் பெண்களுக்கு மரியாதையோடு, பாதுகாப்பும் குறையும் என்பதை பெண் உரிமை அமைப்புகள் உணர வேண்டும்.உணருவார்களா?' என்ற கேள்விக் குறியை  எழுப்பியுள்ளார் திரு குருமூர்த்தி.

இந்த வி ஷயங்கள் நமக்குள் பல கேள்விகளை எழுப்புகின்றன. பெண் உரிமை நமக்கு எந்த விதத்தில் கிடைத்திருக்கிறது என்பது புரியவில்லை.இன்றும் ஒரு பெண் உயர் பதவியை,மேல் நிலையை அடையும்போது அதை இலகுவாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை உருவாகவில்லை என்பது மறுக்க முடியாத வருத்தப்பட வேண்டிய வி ஷயம்.  இன்று பெண்ணுரிமை என்ற பெயரில் பெண்கள் பல தவறான வழிகளில் செல்வது மாறவேண்டும். நாகரீகம் என்ற பெயரில் நம் பண்பாடு, கலாச்சாரமில்லாத  அநாகரீகமான செயல்களைச் செய்யக் கூடாது என்பதைப் பெண்கள் உணர வேண்டும்.

பாரதி  ஆசைப்பட்ட பட்டங்கள் ஆள்வதிலும்,சட்டங்கள் செய்வதிலும் திறமை பெற்று விட்டோம்.  ஆனால் ஆணுக்கு பெண்ணிங்கே சரிநிகர் சமானமாய் வாழ்கிறோமா என்பதே கேள்விக் குறியாக  இருக்கிறதே?


'ஒரு பெண் இரவு 12 மணிக்கு பயமின்றி சாலையில் தனியாகச் செல்லும் நாள்தான் அவளின் உண்மையான சுதந்திரம்' என்றார் நம் தேசப் பிதா.அந்த நாள் என்று வருமோ அதுதான் உண்மையான மகளிர் தினம்.


 அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!


கட்டுரையைப் படிப்பவர்கள் ஒரு சிறிய பின்னூட்டம் கொடுக்க மறக்காதீர்கள்.

4 comments:

  1. இன்றைய பெண்கள் நிறைய சிந்திக்க வேண்டும். சுதந்திரம் என்பதால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நினைக்காமல், அவர்களது பாதுகாப்பு அவர்கள் கையில் தான் என்று பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

    மகளிர் தின வாழ்த்துக்கள், ராதா!

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்திற்கு நன்றி ரஞ்சனி...

      Delete
  2. வணக்கம்...

    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-02-03-second-prize-winners.html - திரு. VAI. GOPALAKRISHNAN ஐயா அவர்களின் தளம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்...

    http://arusuvaikkalanjiyam.blogspot.com/ இந்த தளத்தில் தான் கருத்திட முடியவில்லை...

    போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மிக்க நன்றி தனபாலன்...

    ReplyDelete