திரு வை.கோபு ஸார் அவர்களின் 27வது கதையான 'அவன் போட்ட கணக்கு' கதையினைப் படிக்க இணைப்பு...
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-27.html
அதற்கான என் விமரிசனத்திற்கான இணைப்பு...
http://gopu1949.blogspot.in/2014/08/vgk-27-02-03-second-prize-winners.html
இது என் விமரிசனம்....
---------------------------------
முந்தைய கதையில் பஞ்சாமியின் பல்லை பலவிதமாக பல்டாக்டர் பாடாய்ப் படுத்தி, பின்பு அத்தனை பல்லையும் பிடுங்கி கடைசியில் போலிப் பல்லைக் கட்டிய டாக்டரும் போலி என்று சொல்லி....பல்சுவை அல்ல...நகைச்சுவை கதை எழுதி பல்லாயிரக் கணக்கான மக்களையும் பல் வலிக்க சிரிக்க வைத்த அந்தக் கதையின் தொடர்ச்சி போல இருக்கிறது 'அவன் போட்ட கணக்கு' !
ஆனால் இது ஒரு தந்தை-மகனுக்கிடையேயான உணர்ச்சிபூர்வக் கதை.
பல்லைப் பற்றிய பல விஷயங்களை பல்லாராய்ச்சிகளைச் செய்து, பல் மருத்துவம் ஏன் படிக்கலாம், எதனால் படிக்கலாம், எப்படி படிக்கலாம், அதன் ப(ல்)லாபலன் என்ன, அதில் கிடைக்கும் பல்லாயிரம் வருமானம், போலியில்லாத பல் டாக்டர் உருவானால் அதன் பயன் என்ன ....இப்படி பல் படிப்பு பற்றி ஒரு பெரிய பட்டியல் போட்டு தமிழ்மணியின் பிள்ளையை ஒரு பல் மருத்துவர் ஆக்க உதவி செய்து விட்டார் கணக்கு வாத்தியார் மூலமாக நம் கதாசிரியர்!
'பெற்ற மனம் பித்து...பிள்ளை மனம் கல்லு', 'நாமொன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்கும்' போன்ற பழமொழிகளை அழகாக எடுத்துச் சொல்லும் நல்ல கதை.
ஒரு தெருவில் ஐந்து பொது மருத்துவர்கள் இருந்தால் ஒரு பல் மருத்துவர் மட்டுமே இருப்பார். மேலும் பல்லைப் பற்றி யாரும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.தாங்க முடியாத வலி வரும்போது மட்டுமே நாம் பல்மருத்துவரிடம் செல்கிறோம்.
ஆனால் கோணல் மாணலான பல்லையும் சீர்படுத்தி, முக அமைப்பை மாற்றி நம்மை அழகுறச் செய்வது பல் மருத்துவர்களால் மட்டுமே முடியும் எனலாம்! தற்காலத்தில் பல் சீரமைப்பு செய்து கொள்ள பலரும் விரும்புவதால் பல் மருத்துவர்களின் தேவையும் அதிகமாகி இருக்கிறது. ஆசிரியர் தன் கதையில் கூறியிருப்பது போல் பல் மருத்துவர்கள் இன்று நிறைய சம்பாதிக்க வாய்ப்புகளும் உள்ளது.
இருவருமாக பல் மருத்துவத்தில் இரண்டு மடங்கு சம்பாதிப்பார்களே என்று எண்ணினார் வாத்தியார். அதை சொல்லவும் செய்தார்.தான் சொன்னதைக் கேட்டு படிக்க வைத்த தமிழ்மணிக்கு இனி நல்ல காலம் ஆரம்பித்து விட்டதாக வாத்தியாருடன் சேர்ந்து நாமும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு ஆயுள் மிகக் குறைவு!
ஒரு பல்லைப் பிடுங்கினாலே வலி உயிர் போய்விடும். இதில் 32 பல்லையும் ஒரே நேரத்தில் பிடுங்குவது என்றால்....அவரது தாங்க முடியாத துக்கத்தை ஆசிரியர் பல் பிடுங்குவதை உதாரனமாக்கிச் சொல்வது வித்யாசமாக உள்ளது.
இக்காலப் பிள்ளைகளுக்கு பாசம், நேசம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
தான் செய்வதும்,நடந்து கொள்ளும் முறையும் மட்டும்தான் சரி என்பது அவர்களின் வாதம்.
பெரியவர்களின் அனுபவத்தை அவர்கள் 'அந்தக் காலம்' என்று ஒதுக்கித் தள்ளும் அலட்சியம்.
அறிவுரை சொன்னாலோ 'பெரிசுக்கு இதைத் தவிர வேற வேலை இல்லையா?' என்ற பரிகசிப்பு.
தான் செய்வதும்,நடந்து கொள்ளும் முறையும் மட்டும்தான் சரி என்பது அவர்களின் வாதம்.
பெரியவர்களின் அனுபவத்தை அவர்கள் 'அந்தக் காலம்' என்று ஒதுக்கித் தள்ளும் அலட்சியம்.
அறிவுரை சொன்னாலோ 'பெரிசுக்கு இதைத் தவிர வேற வேலை இல்லையா?' என்ற பரிகசிப்பு.
'தென்னையைப் பெத்தா இளநீரு; பிள்ளையைப் பெத்தா கண்ணீரு' என்ற நிலையை இன்று முதியவர்கள் பலரிடம் காண முடிகிறது.
பிள்ளையைப் பாசத்துடன் பெற்று, வளர்த்து அவனுக்கு வேண்டியவற்றை கண்ணும், கருத்துமாகச் செய்து நல்ல படிப்பையும் படிக்க வைத்து அவன் தனக்கு பின்னாளில், வயதான காலத்தில் கூட இருந்து கைகொடுப்பான் என்று கனவு காணும் பெற்றோர்கள் மாற வேண்டும்.
எதிர்பார்ப்பு இல்லாத போது ஏமாற்றமும் இருக்காது. அதற்கு பெரியவர்கள் தம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
பிள்ளைகளை மட்டுமே நம்பி இராமல் நமக்கென்று ஒரு தொகையைத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
'பட்டம்
மட்டும் வாங்கி வந்து பறந்து செல்லப் பார்க்குதடி' என்ற நடிகர் திலகத்தின்
பாடல் காட்சிகள்தான் இந்தக் கதையைப் படித்ததும் கண்ணில் தெரிந்தது.
'யாரை நம்பி நான் பிறந்தேன்...போங்கடா போங்க.
.என் காலம் வெல்லும்...வென்ற பின்னே வாங்கடா வாங்க' என்று அவர் நெஞ்சு நிமிர்த்தி பாடியது போல அந்த நல்ல நாள் வரும்போது மாசிலாமணியும் தன் தந்தையின் பெருமையை உணர்ந்து திரும்பி வர இறைவன் அருள் புரியட்டும்! நிச்சயம் இறைவன் அப்படி ஒரு கணக்கைப் போடுவார்!
.என் காலம் வெல்லும்...வென்ற பின்னே வாங்கடா வாங்க' என்று அவர் நெஞ்சு நிமிர்த்தி பாடியது போல அந்த நல்ல நாள் வரும்போது மாசிலாமணியும் தன் தந்தையின் பெருமையை உணர்ந்து திரும்பி வர இறைவன் அருள் புரியட்டும்! நிச்சயம் இறைவன் அப்படி ஒரு கணக்கைப் போடுவார்!
இந்தக் கதைக்கு ஏற்றாற்போல் தேர்ந்தெடுத்து பதிவு
செய்துள்ள படக் காட்சிகள் ஒரு சித்திரப் படக்கதையை அனிமே ஷனோடு பார்த்த
அனுபவத்தைக் கொடுத்த ஆசிரியருக்கு பல்லாயிரம் நன்றிகள்!
No comments:
Post a Comment