நான் கடந்த ஆண்டு ஆகஸ்டில்தான் மத்யமர் தள உறுப்பினர்
ஆனேன்.ரஞ்சனி நாராயணன் @Ranjani Narayanan எனது நெருங்கிய தோழி. நேரிலும்
சந்தித்திருக்கிறோம். அவரது FB profileல் POTW மத்யமர் என்று இருந்ததைப்
பார்த்து அதுபற்றிக் கேட்டபோது இத்தளம் பற்றிக் கூறினார். அதன்பின்பே
மத்யமரில் இணைந்தேன். எனக்கு மத்யமர் மூலம் பல விஷயங்களை அறிந்து கொள்ள
முடிகிறது.
என் முதல் பதிவாக ஆவணிஅவிட்டம் பற்றிய பதிவு போட்டிருந்தேன்.
மொத்தம்13 கமெண்ட்டுகளே! பாதி என்னுடைய பதில் கமெண்ட்டுகள்! அந்தப்
பதிவிற்கு எனக்கு POTWவுக்கு சிபாரிசு செய்த திரு குருசாமி ரமேஷ் @Gurusamy
Ramesh.அவர்களுக்கு நன்றி
அடுத்து ரக்ஷாபந்தன் சிறுகதை எழுதினேன். அபர்ணா முகுந்தன்
@Aparna Mukundhan அந்தக் கதையின் முடிவை இறுதிவரை ஒப்புக்கொள்ளவில்லை!
திரு உமாமகேஸ்வரன் விஸ்வநாதன் @Umamaheswaran Viswanathan அவர்களுக்கு
அப்படி ஒரு அனுபவம் இருந்ததை எழுதியபோது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.
அதன்பின் எழுதிய சில ஆன்மிகப் பதிவுகளின் பின்னூட்டங்கள் ஒற்றை இலக்கத்திலேயே இருந்தது.என் மனமும் சற்றே துவண்டது.
ராதாஷ்டமி பற்றி எழுதியபோது, 'ராதை கோபியரின் ஒருமித்த
வடிவமே' என்று கீத்மாலா ராகவன் @Geethmala Ragavan குறிப்பிட்டபோது,அதற்கான
ஆதாரங்களைத் தேடி படித்தபோது நான் பல விஷயங்களை அறிய முடிந்தது. இதனால்
மத்யமரில் நிறைய எழுதும் ஆர்வம் ஏற்பட்டது.
அடுத்து அக்டோபரில் நான் எழுதிய நவராத்திரி ஸ்பெஷல் கதையைப்
படித்து, அது தனக்கு மிகப் பிடித்த கதை என்று சொல்லி என்னை மகிழ்ச்சி
வெள்ளத்தில் ஆழ்த்தியவர் ரேவதி பாலாஜி @Revathi Balaji. அட்மின்
குழுமத்தில் உள்ள அவர் பாராட்டியதுடன் அதற்கு முதன்முறை POTW பெற்றது
எனக்கு மத்யமரில் பங்களிப்பை அதிகப்படுத்தியது.
அதே மாதத்தில் நவராத்திரிக்காக நான் எழுதிய 'Night at the golu' விற்கு அடுத்த POTW. ஆச்சரியமான ஆனந்தம்!
அடுத்து நவம்பரில் என் 'குறும்புக் குழந்தைகள்'பதிவுக்கு
மூன்றாம் முறையாக POTW. அத்துடன் அன்றே GEMம் கிடைக்க என் மகிழ்ச்சிக்கு
எல்லையே இல்லை! வானில் பறந்தேன்!
மத்யமரில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு தலைப்பு கொடுத்து
அதைப் பற்றி எழுதுவது மிக சுவாரசியமான, வித்யாசமானதாக உள்ளது. பலரின்
அனுபவங்களையும் அறிவதால் பல விஷயங்களைப் பல கோணங்களில் அறிய முடிகிறது.
தனித்திறமைகள் பற்றிய என் பதிவுகளும், பாலா ஹரி #Bala Hari
அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு நான் எழுதிய கதையும் எனக்கு மிகவும் பிடித்த
பதிவுகள்.
டிசம்பரில் நான் எதிர்பார்க்காமல் மீண்டும் GEM பரிசு!!இதுவரை
60 பதிவுகளைப் பகிர்ந்துள்ளேன்.என் பகிர்வுகளைப் படித்து பாராட்டிய
#மத்யமர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
POTW, GEM இவற்றைப் பெறும்போது நம் கடமையும் அதிகரிப்பதை நான்
உணர்கிறேன். இன்னும் நிறைய எழுத வேண்டும், நம் எண்ணங்களை அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள வேண்டும் என எண்ணும்போதே, மற்றவர் பதிவுகளையும் படித்து,
பின்னூட்டமிட்டு உற்சாகமும், ஊக்கமும் தரவேண்டும் என்பதை உணர்கிறேன்;
கூடியவரை அவ்வாறே செய்கிறேன்.
மத்யமரில் எனக்கு தோழியான அனுராதா விஸ்வேசன் @Anuradha
Viswesan எங்கள் ஊர் குடந்தைவாசி என அறிந்தபோது, எங்கள் நட்பும்
இறுக்கமானது.
முகநூலில் சில தளங்களில் நான் உறுப்பினராக இருந்தாலும்,
மத்யமரில் இணைந்ததால் உண்டான மன மகிழ்ச்சியும், சந்தோஷமும் வேறு எதிலும்
இல்லை என்பது உறுதி. இது பொழுதுபோக்குத் தளம் மட்டுமன்றி, பொது அறிவைப்
பெருக்கிக் கொள்ளவும், ஆன்மிகம், நாட்டு நடப்பு பற்றி அறியவும் மிகச்
சிறந்த தளம் என்பதில் ஐயமில்லை.2018ம் ஆண்டு மத்யமரால் #மறக்க
முடியாதஆண்டாக மாறியதை மகிழ்வுடன் கூறிக்கொள்கிறேன்!
எனது பதிவுகளை ஏற்று, ஒப்புதல் அளித்து, தளத்தில் வெளியிடும் அட்மின்களுக்கு மிக்க நன்றி
இந்தப் பதிவு மிக மிகத் தாமதமாக அனுப்புவதற்கு மன்னிக்கவும்.வீட்டு விசேஷங்கள், வெளியூர் பயணத்தாலும் பாதி எழுதியிருந்த பதிவை இன்றுதான் முடித்து அனுப்ப முடிந்தது. நன்றி
No comments:
Post a Comment