ஒரு புகைப்படத்தின்
பிரதியைப்
பார்க்கலாம். ஒரு
மனிதரைப் போல
அச்சு அசலான
இன்னொரு மனிதரைக்
கூடக் காண
முடியும். ஆனால்
ஒரு ஆலயம்
போன்று அதே
அளவுகளுடன், அமைப்புகளுடன்
உள்ள ஒரு
ஆலயத்தைக் காண
வேண்டுமா? பூனாவுக்கு
அருகிலுள்ள 'ஷிர்காவ்ன்'
என்ற இடத்திற்கு
சென்றால் அப்படிப்பட்ட
ஒரு ஆலயத்தைக்
காணலாம். அங்கு
அமைந்துள்ள சீரடி பாபாவின் ஆலயம்தான்
பிரதி
ஷிர்டி என்று
அழைக்கப் படுகிறது.
ஆலய நுழைவு வாயில் |
சீரடி
பாபா ஏழைகளுக்கு அருள்
செய்பவர் என்பதை
இக்கோயில் உருவான
விதத்தில் இருந்தே
நாம் அறிய முடியும். 'ஷிர்காவ்ன்' என்ற
ஊர் மழைப்
பிரதேசமான ஒரு
சிறு கிராமம். அங்குள்ள
ஏழைக் குழந்தைகளும்
கல்வி பயில
வேண்டும் என்ற
எண்ணத்தில் 1990 ம் ஆண்டு
ஒரு பள்ளி
ஆரம்பிக்கப் பட்டது.
அதனை நிர்வகித்துக்
கொண்டிருந்த பிரகாஷ்
கேசவ்ராவ்
டேவ்லே என்பவருக்கு சீரடி
பாபா இந்த
இடத்திற்கு வரப்
போகிறார் என்ற
எண்ணம் தோன்றியதாம்.
அதற்கேற்றாற்போல் அடுத்த
நாளே தெரிந்த
ஒருவர் தம்
நிலத்தை இலவசமாக
கொடுக்க, டேவ்லேக்கு வெகுநாளாக
வராமலிருந்த தொகையான
மூன்று லக்ஷம்
ரூபாய் பணம்
கிடைத்தது.
உடன் பள்ளியுடன் பாபாவிற்கு
ஒரு ஆலயமும்
கட்டும் எண்ணம்
அவர் மனதில்
தீவிரமானதாம்!
பிரதி ஷீரடி |
அதை சீரடி அமைப்பிலேயே
உருவாக்க நினைத்தவர்,
கட்டடக்கலைஞரை
சீரடிக்கே அழைத்துச்
சென்று, ஆலயத்தின்
எல்லா இடங்களின்
அளவுகளையும் எடுத்து,
அதே அளவுகளில்
அதே போன்று உருவாக்கச்
செய்தார்.
பாபாவின் சிலையும் அதே போன்றதே!
ஆலயம் உருவாக்கலாம்: ஆனால் குருஸ்தான்....அதற்கு வேப்பமரம்? எப்படி சீரடி போல் அமைப்பது?
ஆலயம் உருவாக்கலாம்: ஆனால் குருஸ்தான்....அதற்கு வேப்பமரம்? எப்படி சீரடி போல் அமைப்பது?
யோசித்துக்கொண்டிருந்தவரின்
கனவில் தோன்றிய பாபா, அவ்வாலயம்
கட்ட தேர்ந்தெடுத்த
நிலத்தின்
அருகில் மூன்று வேப்பமரங்கள்
இருப்பதை உணர்த்தினார்.
மறுநாள் அங்கு சென்று பார்த்த டேவ்லேக்கு
ஆச்சரியம்
தாங்க முடியவில்லை!பாபாவின்
கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் பெருகியது!
அதில் நடுவிலிருந்த
மரத்தின் கீழ்தான் குருஸ்தான்
உருவாக்கப்
பட்டது. இப்படி பாபாவே தனக்காக அமைத்துக்
கொண்ட ஆலயமே பிரதி ஷிர்டி! அது ஷிர்டி...இது
ஷிர்காவ்ன்
...பெயரிலும்
ஒற்றுமை!
குரு ஸ்தான் |
அனைவரும் ஆச்சரியப்
படும் விதமாக இவ்வாலயம்
ஒன்பதே மாதங்களில்
முழுமை பெற்றது. இங்கு பாபாவின் சாந்நித்யத்தை
விளக்கும்
விதமாக, இங்கு கட்டிட வேலை செய்த பலருக்கும்
பல அற்புதங்கள்
நடைபெற்றனவாம். கர்ப்பக்கிரகம்,
சமாதி மந்திர், சாவடி, குருஸ்தான்,
த்வாரகமாயி
என அத்தனையும்
அச்சு பிசகாமல் உருவாக்கப்பட்டு
2003, ஜூன்
11 கும்பாபிஷேகம்
நடைபெற்றது. கோவிலை
வெளியிலிருந்து
பார்க்கும்போது
சீரடிக்கே வந்து
விட்டதைப்போல் தோன்றுகிறது.
சமாதி மந்திரில் சென்று பாபா முன் நிற்கிறோம். சாந்தமான கருணை வழியும் விழிகள்: வாவென்று அழைப்பதைப் போன்ற புன்னகை வதனம். 'உன் வினைகளைத் தீர்க்க நான் இங்கே விச்ராந்தியாக அமர்ந்திருக்க நீ என்னை எங்கெங்கோ தேடுகிறாயே! என் பாதங்களைப் பற்றிக்கொள். உன் கவலைகளை நான் காணாமல் போகச் செய்கிறேன்' என்று வெள்ளித் திருவாசியும், பட்டு பீதாம்பரமுமாக கம்பீரமாகக் காட்சி தரும் பாபாவின் திருவுருவம் நம் மனதை ஆசைகளில் இருந்து விலக்கி 'நீயே சரணம்' என்று அடிபணிய வைக்கிறது. அந்த ஆகர்ஷண சக்தியில் கட்டுண்டு அங்கு சற்று நேரம் தியானத்தில் அமர்ந்தாலே நம் மனம் அமைதி பெறுகிறது! சீரடியில் லட்சக் கணக்கான மக்கள் கூட்டத்தில் பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசிக்கும் சாயி பகவானை இங்கு நின்று, நிதானமாக, நிம்மதியாக தரிசிக்கலாம்.
பாபா |
துவாரக மாயியில் எந்நேரமும்
அணையாது எரியும் துனியும் சீரடியிலிருந்தே
கொண்டு வரப் பட்டது. அதிலிருந்து
எடுக்கப்படும்
உதியே பிரசாதமாகும். குருஸ்தானில்
சாயியின் அருளை அனுபவபூர்வமாக
உணரலாம். பலர் வாழ்விலும்
பாபா நடத்திய அற்புதங்கள்,
ஜாதி, மத பேதமில்லாத
இறைவனின் அருளை உணர்த்துகிறது.
அன்னசத்திரம், கல்விச்சாலை, நூலகம் என்று பல தர்ம காரியங்கள் நிர்வாகத்தாரால் நடத்தப் படுவதைக் காணும்போது இல்லாதார்க்கும், இயலாதார்க்கும் அருளை வாரி வழங்கவே இறைவன் இது போன்ற இடங்களைத் தேடிவந்து கோயில் கொள்கிறார் போலும் என்று நினைக்கத் தோன்றுகிறது!
இங்கு தினமும் ஐந்து வேளை ஆரத்தி உண்டு. காலை 6 முதல் இரவு 10 மணி வரை தரிசனம் செய்யலாம். இங்கு ஆலய பிரதிஷ்டதினம், ஸ்ரீராமநவமி, சாயிபாபா சமாதி நாள் , குருபூர்ணிமா, தசரா ஆகிய விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
பக்தர்கள் வேண்டும் வரங்களையும், எல்லையில்லா அன்பு, அருள், அமைதியையும் வாரி வழங்கும் சாயி பகவானை ஆரவாரமின்றி தரிசிக்க விரும்புவோர் அவசியம் செல்ல வேண்டிய ஆலயம் இந்த பிரதி ஷிர்டி!
ஆலயம் இருக்குமிடம்..
ஷிர்காவ்ன் (Shirgaon )மும்பை-பூனா ஹைவேயில் அமைந்துள்ளது. பூனா புகைவண்டி நிலையத்திலிருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
தரிசன நேரம்....காலை 5.15 மணி முதல் இரவு 10 மணிவரை
தொலைபேசி...021142-281468
021142-231213
விளக்கங்களுக்கு நன்றி...
ReplyDeleteபடங்கள் எதுவும் பதிவில் தெரியவில்லை...
நன்றி...படங்களை சரி செய்கிறேன்.
Delete