Showing posts with label Anmeekam... Show all posts
Showing posts with label Anmeekam... Show all posts

Saturday, 30 April 2016

அனைத்தும் தரும் அன்னாவரம் ஸ்ரீசத்ய நாராயண சுவாமி ஆலயம்

என்னைக் கவர்ந்த கோயில்களில் ஒன்று அன்னாவரம் ஸ்ரீ வீர சத்யநாராயண சுவாமி கோயில். சத்யநாராயணரின் ஆலயங்கள் மிகக் குறைவே. அவற்றுள் தனிச் சிறப்பு கொண்டு விளங்குவது அன்னாவரம் ஆலயம். அக்கோயிலின் அழகும், சாந்நித்தியமும் தரிசிப்பவரை  மெய்சிலிர்க்க வைக்கும். இவ்வாலயத்தில் பிரம்மா, சிவன், மகாவிஷ்ணு மூவரும் இணைந்து இருப்பது இவ்வாலயத்திற்கு சிறப்பை அதிகரிக்கிறது. மும்மூர்த்திகள் இணைந்து அருள் தரும் ஆண்டவனுக்கு 'ஹரி ஹர ஹிரண்யகர்ப த்ரிமூர்த்தியாத்மகா'என்ற பெயரும் உண்டு.

ஆந்திராவில் திருப்பதிக்கு அடுத்ததாக மிக பெருமையும், சிறப்பும், செல்வமும்  பெற்ற ஆலயமாக அன்னாவரம் திகழ்கிறது. முற்காலத்தில் இவ்வூரில் எப்பொழுதும் தடையின்றி அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இதற்கு அன்னாவரம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும், இங்கு அருள்புரியும் ஸ்ரீ சத்ய நாராயணர் 'அனைன வரம்', அதாவது தன்னை வணங்கியவரின் விருப்பமான வரங்களைத் தருபவர் என்பதாலும் அன்னாவரம் என்ற பெயர் பெற்றதாகக் கூறப் படுகிறது.

இவ்வாலயம் அமைந்த வரலாறு ஸ்கந்தபுரானத்தில் ரேவாகாண்டத்தில் காணப்படுகிறது.இறைவன் கோயில் கொண்டிருக்கும் இம்மலை 'ரத்னகிரி' என்று அழைக்கப் படுகிறது. இம்மலை மேருமலையின் மகனாக புராணம் உரைக்கிறது. மேருமலையும், அதன் மனைவி மேனகையும் வரம் செய்து மகாவிஷ்ணுவின் அருளால் ரத்தினாகரா, பத்ரா என்ற இரு மகன்களைப் பெற்றனர். பத்ரா விஷ்ணுவை நோக்கித் தவம் செய்து பத்ராசலம் என்ற மலையாகி தன்னிடம் விஷ்ணுவின் அவதாரமாகிய ஸ்ரீராமபிரானைத் தாங்கிப் புகழ் பெற்றது.



ரத்னாகர மலையும் நாராயணரை நோக்கித் தவம் செய்து அவரையே தன்னிடத்தில் வந்து வாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தைக் கேட்க, விஷ்ணுவும் தானே வீர வேங்கட சத்ய  நாராயண சுவாமி என்ற பெயரில் இங்கு கோயில் கொண்டார் என்கிறது தல வரலாறு. ரத்னாகர் மலை ரத்னகிரி என்ற பெயரைப் பெற்றது. இம்மலையைத் தொட்டவாறு புண்ணிய நதியான பம்பா சரோவர் என்ற ஆறு ஓடுகிறது.

இங்கு பெருமான் ஆலயம் கொண்டது எவ்வாறு? ஏரங்கி பிரகாசம் என்ற அந்தணரின் கனவில் வந்த நாராயணர் தன் விக்கிரகம் இம்மலையில் வழிபாடு இன்றி இருப்பதாயும்,அதனைக் கண்டுபிடித்து ஆலயம் அமைக்கும்படியும் ஆணையிட அவரும் ஊர்மக்களிடம் இவ்விஷயம் சொல்லி, அனைவரும் பகவானைத் தேடிக் கண்டுபிடித்து இம்மலையில் சிறிய ஆலயம் அமைத்து வழிபட ஆரம்பித்த ஆண்டு 1891. அதன்பின் 1934ம் ஆண்டு மீண்டும் சற்று பெரிய ஆலயமாக உருவாக்கப்பட்டது. சில்ப  சாஸ்திரம் மற்றும் ஆகம விதிகளின்படி ரதம் போன்ற தற்போதைய ஆலய அமைப்பு உருவாக்கப் பட்டது 2012ல்.





ரத்னகிரி என்ற சிறிய குன்றின்மேல் நான்கு புறம் சக்கரங்களைக் கொண்டு ரத வடிவில், அழகிய வெண்ணிற கோபுரங்களைக் கொண்ட ஆலயத்திற்கு சில படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இங்கு கோயில் கொண்டுள்ள சத்யநாராயண சுவாமி 13 அடி உயரத்தில் உருளை வடிவத்தில் காட்சி தரும் வித்யாசமான அமைப்பில் உள்ளார். கீழும், மேலுமாக இரண்டு தளங்களைக் கொண்ட கர்ப்பக்கிரகத்தில் ஸ்ரீ சத்யநாராயண பீடம் என சொல்லப்படும் கீழ்ப் பகுதியில் பிரம்ம  ரூபமாகக் காட்சி தரும் இறைவனின் நான்கு பக்கங்களிலும் ஆராதனை மூர்த்திகளாக விநாயகர், சூரியன், ஈசன், அம்பிகை உருவங்கள் அமைந்துள்ளன. 'ஸ்ரீ மகாத்ரிபத் வைகுண்ட  நாராயண யந்திரம்' என்னும் சக்தி வாய்ந்த  விசே ஷ யந்திரம் அமைக்கப் பட்டுள்ளது. இது ஜன தன ஆகர்ஷண யந்திரம் என்பதாலேயே இங்கு பக்தர்களின் வரவு அதிகமாக உள்ளது. தன்னை வணங்குவோரின் ஆசைகளையும், வேண்டுதல்களையும் வரமாகத் தரும் ஸ்ரீ சத்யநாராயணரின் அருள் உலகளாவியது.

மேல்நிலையில் ஸ்ரீ சத்யநாராயண சுவாமியின்  வலப்பக்கம் லிங்க ரூப சிவபெருமானும், இடப்பக்கம் ஸ்ரீ அனந்த லக்ஷ்மி தாயாருடனும் அழகுக் காட்சி அருள்கின்றனர். தங்கக் கவசத்தில் பளபளவென ஜொலிக்கும் சத்யநாராயணரின் முன் நாம் மெய்மறந்து நிற்கிறோம். 'நாராயணா ஏன்னா நாவென்ன நாவோ 'என்பதுபோல் நம் வாய் 'நாராயணா' என்றுதான் திரும்பத் திரும்ப சொல்கிறதே தவிர,  அவரிடம் வேண்டுவது எதுவென்று புரியவில்லை. அங்கேயே இறைவனுடன் கரைந்து விடும் மனோபாவமே ஏற்படுகிறது.மெய்சிலிர்க்கும் அனுபவமாக உள்ளது. 

இவ்வாலயத்தில் சத்யநாராயண விரதம் செய்வது மிக சிறப்பானதாகக் கூறப் படுகிறது. தம்பதிகளாகச் செய்யும் இந்த பூஜைக்கான கட்டணம் 200 ரூபாய் முதல் 1500 வரை உண்டு. காலை 6 மணி முதல் மாலை 6 வரை இந்த பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுவர். கோவிலின் உள்ளே இருக்கும் கல்யாண மண்டபத்தில் அனைவரும் வரிசையாக உட்கார வைக்கப் பட்டு, பூஜைக்கான சாமான்களைத் தந்து, சங்கல்பம் செய்து வைத்து சுவாமிக்கு முன்பு அர்ச்சகர்கள்  சத்யநாராயண பூஜை செய்து வைக்கிறார்கள். கடைசியாக தீபாராதனை முடித்து, கதை படித்து விரதத்தை பூர்த்தி செய்கிறார்கள். சத்யநாராயணருக்கு விசே ஷமான இத்தலத்தில் இந்த விரத பூஜை செய்வதால் திருமண பாக்கியம், பிள்ளைப் பேறு, விரும்பிய வேலை, இவற்றுடன் நினைத்தது நிறைவேறும் என்று கூறப் படுகிறது. எனக்கு இது நிதர்சனமாக நடந்தது. 

ஆலயம் மிக சுத்தமாகப் பராமரிக்கப் படுகிறது.இக்கோயில் அருகில் அமைந்துள்ள ராமர்  மற்றும் வன துர்கை ஆலயங்களும் மிக அழகாக உள்ளன. இங்குள்ள கோசாலை அருமையாக பராமரிக்கப் படுகிறது. ஒவ்வொரு ஏகாதசியும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.மே மாதம் 6 நாட்கள் நடைபெறும் சுவாமியின் திருக் கல்யாண உத்சவம் மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது. அந்த நன்னாளில் இத்தலத்திற்கு வந்து திருமணம் செய்து கொள்பவர்களின் கூட்டமும் அதிகமாக இருக்குமாம்!

மற்றும் நவராத்திரி, தெப்ப உத்சவம், தீப உத்சவம் இவற்றுடன் சிவபெருமானுக்கான உத்சவங்களும் இங்கு  மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  மக்கள் கூட்டம் திருப்பதி போன்றே காணப்படுகிறது.
இக்கோயிலுக்கு ஒருமுறை சென்று தரிசித்தவரை மீண்டும் ஈர்க்கும் சக்தி இந்த பெருமானுக்கு நிச்சயம் உண்டு. ஒவ்வொரு முறை செல்லும்போதும் எனக்கு மீண்டும் சென்று அப்பெருமானை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாலேயே எனக்கு மிகவும் பிடித்த கோயிலாக உள்ளது.

அன்னாவரம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் விசாகப்பட்டினத்திலிருந்து 125 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அனைவரும் வாழ்வில் ஒருமுறை அவசியம் தரிசிக்க வேண்டிய அற்புத புண்ணியத் தலம் அன்னாவரம்.

Wednesday, 18 November 2015

பூனாவில் இன்னொரு சீரடி...



         ஒரு  புகைப்படத்தின்  பிரதியைப்   பார்க்கலாம்.  ஒரு  மனிதரைப்  போல  அச்சு  அசலான  இன்னொரு  மனிதரைக்  கூடக்  காண  முடியும்.  ஆனால்  ஒரு  ஆலயம்  போன்று  அதே  அளவுகளுடன்அமைப்புகளுடன்  உள்ள  ஒரு  ஆலயத்தைக்  காண  வேண்டுமாபூனாவுக்கு  அருகிலுள்ள  'ஷிர்காவ்ன்என்ற  இடத்திற்கு  சென்றால்  அப்படிப்பட்ட  ஒரு  ஆலயத்தைக்  காணலாம்.  அங்கு  அமைந்துள்ள  சீரடி   பாபாவின்  ஆலயம்தான்  பிரதி ஷிர்டி  என்று  அழைக்கப்  படுகிறது.


ஆலய நுழைவு வாயில்



         சீரடி பாபா  ஏழைகளுக்கு  அருள்  செய்பவர்  என்பதை  இக்கோயில்  உருவான  விதத்தில்  இருந்தே  நாம்  அறிய முடியும். 'ஷிர்காவ்ன்என்ற  ஊர்  மழைப்  பிரதேசமான  ஒரு  சிறு  கிராமம். அங்குள்ள  ஏழைக்  குழந்தைகளும்  கல்வி  பயில  வேண்டும்  என்ற  எண்ணத்தில்  1990 ம்   ஆண்டு  ஒரு  பள்ளி  ஆரம்பிக்கப்  பட்டது.  அதனை  நிர்வகித்துக்  கொண்டிருந்த  பிரகாஷ்  கேசவ்ராவ் டேவ்லே என்பவருக்கு  சீரடி  பாபா  இந்த  இடத்திற்கு  வரப்  போகிறார்  என்ற  எண்ணம்  தோன்றியதாம்.  அதற்கேற்றாற்போல்  அடுத்த  நாளே  தெரிந்த  ஒருவர்  தம்  நிலத்தை  இலவசமாக  கொடுக்கடேவ்லேக்கு வெகுநாளாக  வராமலிருந்த  தொகையான  மூன்று  லக்ஷம்  ரூபாய்  பணம்  கிடைத்தது. உடன்  பள்ளியுடன்  பாபாவிற்கு  ஒரு  ஆலயமும்  கட்டும்  எண்ணம்  அவர்  மனதில்  தீவிரமானதாம்!


 
பிரதி ஷீரடி

           
  அதை  சீரடி  அமைப்பிலேயே  உருவாக்க  நினைத்தவர்கட்டடக்கலைஞரை  சீரடிக்கே அழைத்துச்  சென்றுஆலயத்தின்  எல்லா  இடங்களின்  அளவுகளையும் எடுத்துஅதே  அளவுகளில்  அதே  போன்று  உருவாக்கச்  செய்தார்.  பாபாவின்  சிலையும்  அதே  போன்றதே!


           
ஆலயம்  உருவாக்கலாம்:  ஆனால்  குருஸ்தான்....அதற்கு  வேப்பமரம்எப்படி  சீரடி  போல்  அமைப்பது?  

யோசித்துக்கொண்டிருந்தவரின்  கனவில்  தோன்றிய  பாபாஅவ்வாலயம்  கட்ட  தேர்ந்தெடுத்த  நிலத்தின்  அருகில்  மூன்று  வேப்பமரங்கள்  இருப்பதை  உணர்த்தினார்.  மறுநாள்  அங்கு  சென்று  பார்த்த  டேவ்லேக்கு  ஆச்சரியம்  தாங்க  முடியவில்லை!பாபாவின்  கருணையை  எண்ணி  ஆனந்தக்  கண்ணீர்  பெருகியது!  அதில்  நடுவிலிருந்த  மரத்தின்  கீழ்தான்  குருஸ்தான்    உருவாக்கப்  பட்டது.  இப்படி  பாபாவே  தனக்காக  அமைத்துக்  கொண்ட  ஆலயமே  பிரதி  ஷிர்டி!  அது  ஷிர்டி...இது  ஷிர்காவ்ன்  ...பெயரிலும்  ஒற்றுமை! 

குரு ஸ்தான்


             அனைவரும்  ஆச்சரியப்  படும்  விதமாக  இவ்வாலயம்  ஒன்பதே  மாதங்களில்  முழுமை  பெற்றது.  இங்கு  பாபாவின்  சாந்நித்யத்தை  விளக்கும்  விதமாகஇங்கு  கட்டிட  வேலை  செய்த  பலருக்கும்  பல  அற்புதங்கள்  நடைபெற்றனவாம். கர்ப்பக்கிரகம்சமாதி  மந்திர்சாவடிகுருஸ்தான்த்வாரகமாயி  என  அத்தனையும்  அச்சு  பிசகாமல்  உருவாக்கப்பட்டு  2003,  ஜூன்  11    கும்பாபிஷேகம்  நடைபெற்றது.   கோவிலை  வெளியிலிருந்து  பார்க்கும்போது  சீரடிக்கே   வந்து  விட்டதைப்போல்   தோன்றுகிறது. 



            
சமாதி  மந்திரில்  சென்று  பாபா  முன்  நிற்கிறோம்.  சாந்தமான கருணை  வழியும்   விழிகள்:  வாவென்று  அழைப்பதைப்  போன்ற  புன்னகை  வதனம்.  'உன்  வினைகளைத்  தீர்க்க  நான்  இங்கே  விச்ராந்தியாக    அமர்ந்திருக்க  நீ  என்னை  எங்கெங்கோ  தேடுகிறாயே!  என்  பாதங்களைப்  பற்றிக்கொள்.  உன்  கவலைகளை  நான்  காணாமல் போகச்  செய்கிறேன்என்று  வெள்ளித்  திருவாசியும்பட்டு  பீதாம்பரமுமாக  கம்பீரமாகக்  காட்சி  தரும்  பாபாவின்  திருவுருவம்  நம்  மனதை  ஆசைகளில்  இருந்து  விலக்கி  'நீயே  சரணம்என்று  அடிபணிய  வைக்கிறது.  அந்த  ஆகர்ஷண  சக்தியில் கட்டுண்டு  அங்கு  சற்று  நேரம்  தியானத்தில்  அமர்ந்தாலே  நம்  மனம்  அமைதி  பெறுகிறது! சீரடியில்  லட்சக்  கணக்கான   மக்கள் கூட்டத்தில்  பலமணி  நேரம்  வரிசையில்  காத்திருந்து  தரிசிக்கும்  சாயி  பகவானை  இங்கு  நின்றுநிதானமாகநிம்மதியாக  தரிசிக்கலாம்.

பாபா




                துவாரக  மாயியில்   எந்நேரமும்  அணையாது  எரியும்  துனியும்  சீரடியிலிருந்தே  கொண்டு  வரப்  பட்டது.  அதிலிருந்து  எடுக்கப்படும்  உதியே  பிரசாதமாகும். குருஸ்தானில்  சாயியின்  அருளை  அனுபவபூர்வமாக  உணரலாம்.  பலர்  வாழ்விலும்  பாபா  நடத்திய  அற்புதங்கள்ஜாதிமத  பேதமில்லாத  இறைவனின்  அருளை  உணர்த்துகிறது.


                  
அன்னசத்திரம்கல்விச்சாலைநூலகம்  என்று பல  தர்ம  காரியங்கள்  நிர்வாகத்தாரால்  நடத்தப்  படுவதைக்  காணும்போது  இல்லாதார்க்கும், இயலாதார்க்கும்  அருளை  வாரி    வழங்கவே  இறைவன்  இது  போன்ற  இடங்களைத்  தேடிவந்து  கோயில்  கொள்கிறார்  போலும்  என்று  நினைக்கத்  தோன்றுகிறது!


                   
இங்கு  தினமும்  ஐந்து  வேளை  ஆரத்தி  உண்டு.  காலை 6 முதல்  இரவு  10  மணி  வரை தரிசனம்  செய்யலாம். இங்கு  ஆலய  பிரதிஷ்டதினம்ஸ்ரீராமநவமிசாயிபாபா  சமாதி  நாள் குருபூர்ணிமா, தசரா  ஆகிய  விழாக்கள்  மிகச்  சிறப்பாகக்  கொண்டாடப்படுகின்றன. 


          
பக்தர்கள்  வேண்டும்  வரங்களையும்எல்லையில்லா  அன்புஅருள்அமைதியையும்  வாரி  வழங்கும்  சாயி  பகவானை  ஆரவாரமின்றி  தரிசிக்க  விரும்புவோர்  அவசியம்  செல்ல  வேண்டிய  ஆலயம்  இந்த  பிரதி  ஷிர்டி!  

ஆலயம்  இருக்குமிடம்..

ஷிர்காவ்ன் (Shirgaon )மும்பை-பூனா  ஹைவேயில்  அமைந்துள்ளது.  பூனா  புகைவண்டி  நிலையத்திலிருந்து  32  கிலோமீட்டர்  தூரத்தில்  உள்ளது.
தரிசன நேரம்....காலை 5.15 மணி முதல் இரவு 10 மணிவரை 
தொலைபேசி...021142-281468
                      021142-231213