என் மன ஊஞ்சலில்..!

என் மன எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நான் ஆரம்பித்த வலை ஊஞ்சல் இது!

Sunday, 1 December 2019

சார்தாம் யாத்ரா..1.ஹரித்வார்

உத்தர்கண்ட் மாநிலத்தில்   கடல்மட்டத்திலிருந்து 950 அடி உயரத்தில் உள்ள சிவாலிக் குன்றுகளின் அடிவாரத்தில் கங்கை நதியின் கீழ்கரையில் சமவெளியில் அமைந்துள்ளது ஹரித்வார். இது மிகவும் புராதனமான, புனிதமான நகரம். 

கங்கோத்ரியில் புறப்பட்ட கங்கை கிட்டத்தட்ட 320 கிலோமீட்டர்கள் ஹிமாலயத்தில் பல இடங்களைக் கடந்து இங்கே வந்து சேர்கிறாள். இங்கே கிட்டத்தட்ட 1 மைல் அகலத்தில் பயணிக்கிறாள் கங்கை. ஹிமாலயக் கோவில்களின் நுழைவாயில் ஹரித்வார். இங்கிருந்துதான் சார்தாம் யாத்திரை துவங்குகிறது. இந்தத் தலத்திற்கு கங்காத்வாரம், மாயாபுரி என்கிற பெயர்களும் உண்டு. 

இங்குள்ள கங்கைக்கரை ஹரிகி பவுரி (Hariki Pauri) எனப்படும். ‘ஹரி’ என்றால் விஷ்ணு; ‘பவுரி’ என்றால் ‘பாதம்’. இந்த இடம் ‘ஹரிகி பவுரி’ (விஷ்ணுவின் பாதம்) என்று வழங்கப்படுகின்றது. பத்ரி நாத்திலிருந்து ஹரித்வார் வரை உள்ள விஷ்ணுவின் பாதம் ஹரித்வாரின் கரையில் ஆரம்பிப்பதாக நம்பிக்கை. 

இங்கே தினமும் மாலை வேளையில் விஷ்ணுவின் பாதத்தை வழிபடும் விதமாகக் கங்கைக்கு ஆரத்தி எடுக்கிறார்கள். கரையில் இருக்கும் பல கோவில்களிலும் பெரிய மணிகளை அடித்தபடியே விஷ்ணு, சிவன், கங்கையைப் பாடியவாறு ஆரத்தி காண்பித்து வழிபடுகிறார்கள். கரை முழுவதும் பெரிய பெரிய தீபங்கள் காண்பிக்கப்படுகின்றன. தெய்வீகம் நிலவும் அந்த நேரம் நம் மனம் மெய் மறந்து போகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் கங்கையின் இரு கரைகளிலும் கூடி தீபாராதனை செய்து வழிபடுவது காணக் கண்கொள்ளாக் காட்சியாக  நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. 

ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா நடக்கும் ஹரித்வாரில் கோவில்களுக்கு பஞ்சமில்லை.
மாயாதேவி கோவில்,மானஸாதேவி, சண்டிதேவி கோவில் ஆகியவை இங்குள்ள  புகழ்பெற்ற  ஆலயங்கள். மாயாபுரி என அழைக்கப்படும் சக்திபீடங்களில் ஒன்று  மாயாதேவிகோயில்.

சக்திதேவி தன் தந்தையின் யாகத்திற்கு சிவனின் வார்த்தையை மீறிக் கொண்டு சென்ற வரலாறு நாம் அறிந்ததே. அங்கு மனமுடைந்து இறந்த சக்தியின் உடலை சிவபெருமான் தூக்கிக் கொண்டு கைலாயம் சென்றபோது பூமியில் விழுந்த அவள் அங்கங்களே சக்திபீடங்கள் எனப்படும்.அவளது மேல்பகுதி விழுந்த இடமே இவ்வாலயம்.

'அயோத்யா மதுரா மாயா  காசி காஞ்சி அவந்திகாபுரி த்வாரவதிசைவ ஸப்தைத்தே மோக்ஷதாயகா' என்ற ஏழு மோக்ஷபுரிகளில் இதுவும் ஒன்று. அழகிய கோவில். சந்நிதியில் காளிதேவி,காமாக்யா தேவிக்கு நடுவில் எழிலாகக் காட்சி தருகிறாள் அன்னை மாயாதேவி.

இங்கு மலைமேல் அமைந்திருக்கும் மானஸாதேவி, சண்டிதேவி ஆலயங்களும் சக்திபீடங்களாகும்.  பீடங்களில் ஒன்றான மானஸாதேவி கோயில் சித்த பீட முக்கோணத்தின் உச்சியில் அமைந்துள்ளது. மாயாதேவி, சண்டி தேவி மற்றும் மானஸா தேவி ஆகிய மூன்று தேவிகளும் இணைந்து   முக்கோணமாக  உருவாக்கப்பட்டிருக்கிறது.மலையிலுள்ள இவ்வாலயங்களுக்கு செல்ல ரோப்கார் வசதி உள்ளது.

காஸ்யப முனிவரின் மனதில் தோன்றியதால் அம்மனுக்கு மானஸா தேவி என்று பெயர். பக்தர்களின்  வேண்டுதல்களை உடன் நிறைவேற்றி வைப்பதாலும்  இப்பெயர்.  வாசுகி நாகரின் மனைவியாக மானஸா தேவி வணங்கப்படுகிறார். ஷிவாலிக் மலைகளில் உள்ள 'பில்வா பர்வத்' என்ற இடத்தில் இவ்வாலயம் உள்ளது. மானஸா தேவியின் இரண்டு சிலைகளில் ஒன்றிற்கு ஐந்து கைகளும், மூன்று வாய்களும் மற்றொன்றிற்கு எட்டு கைகளும் அமைந்துள்ளது.

சண்டிதேவியின் ஆலயம் 'ஹரிகி பவ்ரி' என்ற இடத்திலிருந்து 4 கி.மீ.தூரத்தில் உள்ளது. சண்டி தேவி ஆதி சங்கரரால் 8 ஆம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டு 1929 ஆம் ஆண்டு காஷ்மீர் மன்னரால் இந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டது. 
 
சும்பன் நிசும்பன் என இரண்டு அரக்கர்களை அழிக்க சக்தி சண்டிதேவியாக அவதரித்து அவர்களை அழித்தபின் இம்மலையில் ஓய்வு எடுக்கிறாள். இஙகுள்ள இரு சிகரங்கள் சும்ப நிசும்பன் என்ற பெயரில் உள்ளன.

வைஷ்ணோ தேவி கோவில், பாரத் மாதா கோவில், தக்ஷமகாதேவர் கோயில், சப்தரிஷி ஆஸ்ரமம் என தரிசிக்க பல ஆலயங்கள்  உள்ளன. ஆனால் நேரமின்மையால் நாங்கள் மேற்குறிப்பிட்ட ஆலயங்கள் மட்டுமே தரிசித்தோம்.

IMG_20191012_161238.jpg
IMG_20191012_161039.jpg

IMG_20180507_142413.jpg
images (53)_1574840994206.jpeg
Hindu_god_Shiva_murti_statue_near_Ganges_in_Haridwar_India_sights_culture_beliefs_2015.jpg
GettyImages-943681362-b14111ffae644aebabb0659d7e479ed7 (1).jpg

IMG_20191127_133446.jpg

IMG_20191012_182415.jpg

IMG_20191012_182255.jpg








Posted by Radha Balu at 00:04

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Total Pageviews

free hit counter
hit counter

About Me

My photo
Radha Balu
தரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம்! புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர்! பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும்! அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள்! இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி! ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...
View my complete profile

Blog Archive

  • ►  2023 (4)
    • ►  March (3)
    • ►  January (1)
  • ►  2022 (5)
    • ►  November (1)
    • ►  July (1)
    • ►  June (3)
  • ►  2020 (65)
    • ►  July (1)
    • ►  June (1)
    • ►  May (9)
    • ►  April (9)
    • ►  March (4)
    • ►  February (15)
    • ►  January (26)
  • ▼  2019 (79)
    • ▼  December (10)
      • 10.பஞ்ச பத்ரி
      • 7.யமுனோத்ரி தாம்
      • 9.சார்தாம் யாத்திரை..முக்கிய ஆலயங்கள்.
      • 8.பஞ்சபிரயாகை
      • வசனப் போட்டி
      • சார்தாம்..6.கங்கோத்ரி தாம்
      • சார்தாம்...5.முக்தித் தலம் கேதார்நாத்
      • சார்தாம் யாத்ரா..4.சரஸ்வதி நதியின் தோற்றம்
      • சார்தாம் யாத்ரா..2.ரிஷிகேஷ்
      • சார்தாம் யாத்ரா..1.ஹரித்வார்
    • ►  November (27)
    • ►  September (3)
    • ►  August (14)
    • ►  July (6)
    • ►  June (1)
    • ►  May (2)
    • ►  April (11)
    • ►  March (3)
    • ►  February (2)
  • ►  2018 (15)
    • ►  December (11)
    • ►  November (1)
    • ►  May (3)
  • ►  2017 (12)
    • ►  December (8)
    • ►  May (4)
  • ►  2016 (8)
    • ►  June (2)
    • ►  May (5)
    • ►  April (1)
  • ►  2015 (15)
    • ►  November (1)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (4)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2014 (30)
    • ►  November (12)
    • ►  October (1)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  April (3)
    • ►  March (4)
    • ►  January (3)

பக்கங்கள்

  • Home
  • எண்ணத்தின் வண்ணங்கள் ...
  • அறுசுவைக் களஞ்சியம்..
  • கோலங்கள்
  • W.T.W. உலக தமிழ் பெண்
  • மத்யமரில் நான்
  • நிலா முற்றம்...கதை
  • Moms,,,, Expresso
  • Songs
  • Tamil Brahmins Samayal, TBS
  • பிரதிலிபி
Simple theme. Theme images by Juxtagirl. Powered by Blogger.