மத்யமர் கோலப் போட்டியில் என் கோலத்திற்கு பரிசாக சான்றிதழ்! மிக மகிழ்ச்சியான விஷயம்💃 கோலம் போடுவது எனக்கு மிகப் பிடித்தமானது. புள்ளி வைத்தோ, ரங்கோலியோ, உருவக் கோலங்களோ எல்லாம் என் கைவண்ணத்தில் வண்ணக் கோலமாக்குவேன். மார்கழி வருமுன்பே கோலத் தேர்வை ஆரம்பித்து விடுவேன்.
இம்முறை போட்டிக்கான மூன்று கோலங்களுமே ஸ்பெஷலாக தேர்வு செய்து போட்டேன். இதில் எனக்குப் பிடித்தது Kerala Mural Art முறையில் போட்ட
ஸ்ரீ குருவாயூரப்பன்
கோலம். இதைப் போட்டு முடிக்க 4 மணி நேரம் ஆயிற்று. இந்த வருடக் கோலங்களில் எனக்குப் பிடித்த கோலம் இது.
சூரிய கிரகணத்தன்று போட்ட போட்டிக் கோலம் 3D கோலம். பதிவு போட்ட ஐந்து நிமிடத்தில் அப்ரூவ் செய்த மாடரேட்டர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்!
நான் போட்டிக்கென போட்ட முதல் கோலம் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டது. இது Sanskar Barathi rangoli முறையில் போட்டேன். அதில் 'மத்யமர்'என்ற வார்த்தையை கோலத்துக்குள் ளேயே எழுதியிருந்தேன். அதை தனி ஃபோட்டோவாகவும் போட்டிருந்தேன். அதைக் கண்டு பிடிக்க முடியாத Selvi Shankar 'மத்யமர் பெயரில்லாத கோலத்தைப் போட்டிக்கு எடுத்துக்க முடியாது' என்று சொல்ல நான் எடுத்துக் கூறியதும் ஒப்புக் கொண்டார்.
நம் தலைவரோ Shankar Rajarathnam கோலத்துடன் தனி பதிவு போட்டு அதில் 'மத்யமர்' எழுதியிருப்பதைக் கண்டு பிடிக்கச் சொன்னது என் கோலத்துக்கு மேலும் மெருகேற்றியது. 'வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்' வாங்கிய மகிழ்ச்சி எனக்கு! மிக்க நன்றி அட்மின் சார்🙏
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1263529550501523/
என் கோலத்தைப் பரிசுக்கு தேர்ந்தெடுத்த நடுவர்கள் Vijayshree Krishnan, Mallika Ponnusamy , Thailambal ஆகியோருக்கு என் நன்றிகள்🙏
மத்யமர் magazineலும் மத்யமர் பற்றிய என் கருத்தும், இந்தக் கோலமும் பிரசுரித்தமைக்கு மிக்க நன்றி..நன்றி🙏
No comments:
Post a Comment