Saturday, 16 November 2019

Sabash Madhyamar Super Singer..Junior

Sabash Madhyamar
Super Singer..Junior
Name..Cara..Age..5
My granddaughter
Song....Let it go..

லண்டனில் இருக்கும் என் கடைக்குட்டி பேத்தி. Chat செய்தபோது என் பிள்ளையிடம் மத்யமர் சூப்பர் சிங்கர் பற்றி சொன்னேன். அதைப் பற்றி கேட்ட அவள் தானும் பாடுவதாகச் சொன்னாள்.  அந்தப் பிஞ்சுக் குழந்தையின் ஆசையை என்னால் மறுக்க முடியவில்லை. உடனே இந்தப் பாட்டைப்பாடி, என் மகனை வீடியோ எடுத்து அனுப்பச் சொன்னாளாம். அவள் ஆர்வம் என்னை ஆச்சரியப் பட வைக்க அவள் பாட்டை அனுப்பியுள்ளேன். இங்குள்ள பெரியவர்களின் ஆசிகள் அவள் வாழ்வைச் சிறப்பாக்கும்🙏

ட்ரைஃப்ரூட்ஸ் பர்ஃபி

இந்த ஏகாதசிக்கு எங்காத்து குட்டிக் கண்ணனுக்கு ட்ரைஃப்ரூட்ஸ் பர்பி செய்து நிவேதனம் செய்தேன். அதன் செய்முறை இதோ...

ட்ரைஃப்ரூட்ஸ் பர்ஃபி

பாதாம்,மிந்திரி, பிஸ்தா...தலா 1/4 கப்,
வால்நட்...6
அத்திப்பழம்(figs)..5
பேரீச்சை..5
திராட்சை..10
தேங்காய்த்துருவல்..4டீஸ்பூன்
ஏலப்பொடி
நெய்..2டீஸ்பூன்
பாதாம்,மிந்திரி,பிஸ்தா,வால்நட் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். அதை எடுத்துவிட்டு  அதிலேயே துண்டுகளாக்கிய அத்தி,பேரீச்சை மற்றும் திராட்சையை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். நைஸாக அரைக்கக் கூடாது.
வாணலியில் நெய் விட்டு தேங்காய்த் துருவல் சேர்த்து சற்று வதக்கி, அதில் அரைத்த பாதாம் கலவையைச்  சேர்க்கவும். 5 நிமிடம் வதக்கி அதில் பேரீச்சை கலவை சேர்த்துக் கிளறவும். இரண்டு கலவையும் சேர்ந்து கொள்ள அடுப்பை சிறியதாக வைத்து 5நிமிடம்  தீயாமல்  கவனமாகக்  கிளற வேண்டும்.ஏலப்பொடி சேர்க்கவும்.
கீழே இறக்கி வைத்து  நன்கு கலந்து கை பொறுக்கும் சூட்டில்,கையில் நெய் தடவிக் கொண்டு இரண்டாகப் பிரித்து இரண்டு நீள்வட்டமாகச் செய்யவும்.
நன்கு ஆறியதும் அவற்றை வட்டமாக நறுக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி சதுர துண்டுகளாகவும் செய்யலாம். ஃப்ரிட்ஜ்ல் வைத்து உபயோகிக்கவும்.






ஓம் கணபதயே நம:

அன்பின் வடிவமே !
ஆனை முகத்தோனே !
இன்பம் தருபவனே!
இடர்களைக் களைபவனே?

முக்கண்ணன் புதல்வனே!
முருகனுக்கு மூத்தவனே!
தாயும் தந்தையுமே
உலகமென உணர்த்தினாய்!

எளிய வடிவானவனே!
ஏற்றம் தருபவனே!
நன்மை புரிந்திடுவாய்!
செல்வம் அளித்திடுவாய்!

அறம் பொருள் இன்பம்
தந்தெமைக் காப்பாய்!
தயை புரிந்திடுவாய்!
தயாளனே! சரணடைந்தேன்!