மார்கழி மாதம் வந்தாச்சு…!
மார்கழி ஆரம்பிக்கப் போவதை நினைக்கும்போதே உடலும், மனமும்
சிலுசிலுக்கிறது. . மார்கழி மாதப் பனியும், குளிரும், விடிகாலையில்
கண் விழிக்கும்போதே எல். ஆர்.. ஈஸ்வரியின் குரலில் ஒலிக்கும்
மாரியம்மா, காளியம்மா பாடல்களும், , திருப்பாவை, திருவெம்பாவைப்
பாடல்களும் , காலையில் எழுந்து பக்கத்து வீட்டை விடப் பெரியதாகப்
போடும் கோலமும் , அதை அன்று முழுதும் நின்று ரசிப்பதும் இன்றைய
இளம் பெண்களும், குழந்தைகளும் அறியாத, அனுபவிக்காத ஒன்று. மார்கழி
பிறப்பதை நினைக்கும்போதே அந்த நாட்களின் ஞாபகம் வந்து நெஞ்சில்
நிற்கிறது. இன்று நாம் வாழும் ஃ பிளாட்டுகளில் வாசலும் இல்லை:
கோலமும் இல்லை: அதை ரசிப்பவரும் இல்லை.
என் திருமணத்திற்கு முன்பு நான்கு மணிக்கெல்லாம் என் அம்மா ‘எழுந்திரு. மார்கழி மாதம் விடிகாலையில் எழ வேண்டும். வாசல் எல்லாம் தெளித்தாச்சு. கோலம் போடு’ என்பார். கண்கள் இன்னும் தூங்க விரும்பினாலும் கோல ஆசை தூக்கத்தை விரட்டி விடும். கோலத்தை போட்டு முடித்து குளித்து, பக்கத்திலிருந்த கோவிலுக்கு சென்று பஜனையில் பாடிவிட்டு, சுடச்சுட பொங்கலைப் பெற்றுக்கொண்டு வந்து வீட்டில் அதை ருசித்து சாப்பிடும் அனுபவம் ….இன்றும் மனம் அந்த நாளுக்காக ஏங்குகிறது! அறியாத வயதில் அன்று செய்த அந்தப் புண்ணியம்தான் இன்று அன்பான கணவரையும், அருமையான குழந்தைகளையும் கிடைக்கச் செய்தது போலும்! எட்டு வயது முதல் எந்தக் கோலம் பார்த்தாலும் அதை அப்படியே மனதில் வைத்து மறுநாள் வாசலில் போடுவேன். விதவிதமாகக் கோலம் போடும் என் அம்மா அச்சு மாதிரி சிறிதும் வளையாமல், கோணல் இல்லாமல் புள்ளி வைக்கும் திறமையும், அளவெடுத்தாற்போல் கோலம் போடும் அழகும் என்னிடம் கொஞ்சம் குறைவுதான்.
ஆனாலும் புள்ளிக்கோலம், வளைவுக் கோலம், நேர்கோட்டுக் கோலம் என்று எனக்குத் தெரிந்த கோலங்களைப் போட்ட நோட்டுகள் ஏழெட்டு இன்னமும் என்னிடம் உள்ளன. அதிர்ஷ்ட வசமாக நாங்கள் குடியிருந்த வீட்டு வாசல்கள் கோலம் போட ஏற்றதாக இருந்ததால், நானும், என் மகளும் சேர்ந்து அமர்க்களமாகக் கோலம் போடுவோம். என் கணவருக்கு, பிள்ளைகளுக்கு ரொம்ப பிடித்த கோலங்கள் கூட உண்டு! தினமும் போட வேண்டிய கோலங்களை என் பிள்ளைகள்தான் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார்கள்! தினமலர் பத்திரிகையின் பரிசைக் கூட பெற்றுள்ளோம். கோலப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றதுண்டு. இன்றும் எங்கள் ஃ பிளாட்டி ல் சின்ன வாசல்தான் என்றாலும் மார்கழி முழுவதும் புள்ளிக் கோலம்தான் போடுவேன். இது போன்ற இனிய நினைவுகளும், அனுபவங்களும் அக்காலப் பெண்கள் பலருக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.

கோலம் போடுவது ஒரு கலை மட்டும் அல்ல. நம் உடலுக்கும்,
.கைகளுக்கும், இடுப்புக்கும், கண்ணுக்கும், மூளைக்கும் சிறந்த
உடற்பயிற்சியும் கூட. மார்கழி மாத விடிகாலைகளில் காற்றில் ஓசோன்
நிறைந்திருப்பதை அந்நாளிலேயே அறிந்த நம் முன்னோர் இப்படி கோலம்,
பஜனை, கோவிலுக்கு செல்வது என்ற பழக்கங்களை உண்டாக்கியுள்ளனர். கோலம்
என்பதற்கு அழகு என்று பொருள். கற்பனை வளத்தை அதிகரிக்க கோலம்
போடுவது உதவும்.
கோலம் உருவானதற்கான சில சான்றுகளைப் பார்ப்போம். வேத
காலத்தில் அங்குரார்ப்பணத்தின்போது முளைப்பாலிகை பால், பால்குடம் ,
விளக்கு இவற்றை வைக்க தனித்தனி கட்டங்கள் வரைந்து அரிசிமாவு,
மஞ்சள்பொடி நிரப்புவர்.அதுவே காலப் போக்கில் கட்டக் கோலங்களாகி
விட்டன.அக்கினி வளர்க்க ஒன்பது குழிகள் தோண்டிக் குண்டம்
அமைப்பர்.அவற்றை இணைக்க கோடு இட்டதே புள்ளிக் கோலமானது. தமிழ்
மக்கள் பழங்காலத்தில் மணல் ஓவியம் வரைந்ததாக பழைய நூல்களில்
காணப்படுகிறது.வெண்மையும்,
சிவப்பும் இணைந்த கோலம் சிவா-சக்தி
ஐக்கியமாகக் கூறப்படுகிறது.
வடநாடுகளில்
போடப்படும் ரங்கோலி பற்றிய சுவையான கதை இது. ஹோலி என்ற முனிவரின்
மனைவி அவள் கணவர் இறந்ததால் அவர் உருவத்தை பல வண்ணப் பொடிகளால்
வரைந்து அதன் மீது 48 நாட்கள் படுத்து தன் உயிரை விடுகிறாள்.அவள்
நினைவாக பல வண்ணங்களில் போட்ட கோலம் ரங்கோலி ஆயிற்று.
கடவுளுக்கு முன்பாக தினமும் கோலமிடுதல் வேண்டும்.
நவக்கிரக கோலங்கள் போட்டால் அவற்றினால் வரும் தீங்குகள் விலகும்.
ஸ்ரீசக்ரம், ஹிருதய கமலம் கோலங்களை செவ்வாய், வெள்ளி கிழமைகளில்
போடுவதால் செல்வம் கிட்டும். சங்கு, சக்கரக் கோலங்களை
சனிக்கிழமைகளில் போடுவது நல்லது. வீடு வளம் பெறும்..வாசலில்
சூர்யோதயத்திற்கு முன்பு கோலமிடல் வேண்டும். இழையை இடப்புறமாக
இழுக்கக் கூடாது.கோலத்தைக் காலால் அழிக்கக் கூடாது. வாயிற் படிகளில்
குறுக்குக் கோடுகள் போடக் கூடாது. நேர்கோடுகளே போட வேண்டும். இரட்டை
இழைக் கோலமே போட வேண்டும். விசே ஷ நாட்களில் அரிசியை அரைத்த மாவினால்
இழைக் கோலம் போடுவது விசே ஷம். கண்டிப்பாக சுற்றிலும் காவியிடுவதும்
அவசியம். குழந்தை பிறந்தாலும், பெண்கள் பருவம் அடைந்தாலும் அந்த
மகிழ்ச்சியை தெரிவிக்க இரவானாலும் கோலமிட வேண்டும்.
அமாவாசை மற்றும் முன்னோர் காரியங்கள் செய்யும் தினங்களில் மட்டுமே வாசலில் கோலம் போடக் கூடாது.
இன்று ஸ்டிக்கர் கோலங்களே பல வீடுகளுக்கு முன்
காட்சியளிக்கின்றன. தினமும் கோலம் போட முடியாவிடினும் விசே ஷ
நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களிலாவது அழகிய கோலங்களை இட்டு
கோலக்கலை அழியாமல் காப்பாற்ற முயற்சிப்போம்.
கோலம் - இனிய நினைவுகள் எனக்குள்ளும்! வீட்டு வாசலில் அம்மாவும் சகோதரிகளும் கோலம் போட நானும் நின்று கொண்டிருப்பேன்! வரும் காலங்களில் கோலம் போடும் கலை மறைந்து விடுமோ எனும் அளவிற்கு இருக்கிறது நிலை - குறிப்பாக நகரங்களில்
ReplyDeleteபயனுள்ள அருமையான தகவல்
ReplyDelete