லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்?
லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த
பிரிக்கமுடியாத ஆதிப் பரம் பொருள். சிவசக்தி ஐக்கியம்
என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.
"துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே"
என்கிறார் அபிராமி பட்டர். சகஸ்ரநாமம் என்பது அன்னையின்
ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ர நாமத்தைப் பாராயணம்
செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல,
ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள்
பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான
ஞானம் உருவாகும். சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர்
அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின்
பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.
தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன்.
இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி
ஒன்றுமில்லை. இது நோய்களைப்போக்கும். செல்வத்தை
அளிக்கும். அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால்
அகால மரணம்) நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு
இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.
கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி
பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை
செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில்
அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற
இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம்
செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப்
புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.
இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு
வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன் .
பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை
தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள்
நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப்
பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி
தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது
வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.

இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே
தோஷங்கள் விலகிவிடும்.ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ,
ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா
சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.
பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம்
செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால்
மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும்
செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப்
பெறமுடியாது" என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி
என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு
உபதேசிக்கிறார். லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு
சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது
சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட
புண்ணியம் நமக்கு சேரும்.
எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து
பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய
விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.

![தெய்வத்தின் குரல்
ஸ்திரீகளின் ஒரே வைதிகச் சொத்து
ஒளபாஸனம் எல்லா ஜாதியாருக்கும் உண்டு என்றேன். அதே போல் ஒளபாஸனம் ஆண்-பெண் இருவருக்கும், பதி-பத்தினி இரண்டு பேருக்கும் சேர்ந்த பொதுக் காரியமாய் இருக்கிறது.
பதி கிருஹத்திலிருக்கும் போது அவனோடு கூடச் சேர்ந்து பத்தினியும் ஒளபாஸனம் பண்ணுகிறாள். அவன் ஊரிலில்லா விட்டாலும் ஒளபாஸனாக்னியில் ஹோமம் பண்ண வேண்டிய அக்ஷதைகளை அதில் பத்தினியே போட வேண்டும். அந்த ரைட் அவளுக்கு வேதத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது.
பிற்பாடு வந்த பௌராணிகமான விரதங்கள், பூஜைகள் இவைகளைச் சேர்க்காமல் சுத்த வைதிகமாகப் பார்த்தால், ஒளபாஸனத்தைத் தவிர ஸ்திரீக்குச் சொந்தமாக எந்த வேத கர்மாவும் இல்லை. புருஷன் பண்ணுகிறதிலெல்லாம் automatic -ஆக இவளுக்கு share கிடைத்து விடுகிறது. ஆகவே, ‘இவள் கிருஹரக்ஷணை தவிர தனியாக எந்த தர்மமும், கர்மமும் பண்ண வேண்டாம். பண்ணினாலும் ஒட்டாது என்று தான் வைதிகமான தர்ம சாஸ்திரத்தில் இருக்கிறது. ஒரே exception [விதி விலக்கு] ஒளபாஸனம்.
ஆகையால் ‘ரைட்’ ‘ரைட்’ என்று கேட்கிற ஸ்திரீகளை இந்த விஷயத்தில் கிளப்பிவிட்டாவது வீட்டுக்கு வீடு ஒளபாஸனாக்னி ஜ்வலிக்கும்படிச் செய்யலாமோ என்று எனக்கு ஆசை. ஒளபாஸனம் செய்யாத புருஷனிடம் பத்தினியானவள், “உங்களுக்குக் கொஞ்சமாவது வேத ஸம்பந்தம் இருக்கும்படியாக, (நீங்கள் வைதிகமான பாக்கியெல்லாவற்றையும் விட்டுவிட்டாலும்) வேத மந்திரமான காயத்ரீயாவது பண்ணுகிறீர்கள். இப்போது பண்ணாவிட்டாலும், மந்திரமே மறந்து போயிருந்தாலும்கூட, பின்னாலாவது என்றைக்காவது பச்சாதாபம் ஏற்பட்டால் காயத்ரீ பண்ணுவதற்கு அநுகூலமாக உங்களுக்கு உபநயன ஸம்ஸ்காரமாவது ஆகியிருக்கிறது. எனக்கோ உபநயனமும் இல்லை, காயத்ரீயும் இல்லை. நம் மதத்துக்கே, லோகத்துக்கே, ஸ்ருஷ்டிக்கே ஆதாரமாக இருக்கப்பட்ட வேதத்தில் ஸ்திரீயான எனக்கு ஏதாவது ‘ரைட்’ இருக்குமானால் அது இந்த ஒளபாஸனம்தான். நீங்கள் இதுவும் செய்யாவிட்டால் எனக்கு வேத ஸம்பந்தம் அடியோடு போய் விடுகிறதல்லவா?” என்று சண்டை போட்டு அவனை ஒளபாஸனம் பண்ண வைக்க வேண்டும். இந்த மஹா பெரிய சொத்துரிமைக்குத்தான் பெண்கள் சண்டை போட வேண்டும்.](https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/s526x395/10922691_1555910638028813_8239431141425519451_n.jpg?oh=6885ed050792d4ffb4c26b3ce2b5fb62&oe=55655595)