Night at the Golu!
நகைச்சுவை பதிவு
கணபதி...எல்லோரும் எழுந்திருங்க. வீட்டில் எல்லாரும் தூங்கியாச்சு.
பார்வதி...கணேசா! நீ எங்க கிளம்பிட்ட?
கணபதி...நவராத்திரி நாளையோட முடியற்தே. நம்ம இடத்துக்கு கிளம்ப வேண்டியதுதான.
பார்வதி...பத்து நாளா ஒரே இடத்தில உட்கார்ந்து கால்வலி . கொஞ்சம் நடப்போமா.
லக்ஷ்மி...பள்ளி கொண்டிருக்கும் பரமனிடம்...எங்க போனாலும் படுத்து தூங்கற்துதான் வேலை.வந்து எனக்கு கொஞ்சம் காலைப் பிடிச்சு விடுங்கோ... வலி தாங்கல.
விஷ்ணு...நல்ல தூக்கத்துல இருந்தேன். சரி வா. பக்கத்துல உக்காரு.
பார்வதி....சரஸு பார்த்தியா லக்ஷ்மியை. அதிர்ஷ்டக்காரி. வீட்டுக்காரர் எப்புடி கால் பிடிச்சு விடறார்.
சரஸ்வதி....பணப்பை அவகிட்ட இருக்கே..அதான்!
பார்வதி...அதுவும் சரி. நம்மகிட்ட இல்லையே!
சரஸ்வதி...நீங்களும் பரமேஸ்வரரை கூப்பிடுங்கோளேன்!
பார்வதி...ஹ்ம்.கிழிச்சார். தன் உடம்புல பாதியைக் கொடுத்து காலத்துக்கும் நிக்க வச்சுடுவார்.
சரஸ்வதி...நீங்கள்ளாம் கொடுத்து வச்சவா. எங்காத்துக்காரர் என்கூட ஒரு இடம் வரதில்ல. கோவில்லதான் அவருக்கு இடம் இல்லனா கொலுவிலயும் இல்லையே?😰
பார்வதி....இதான் உன் கவலையா? அடுத்த வருஷ கொலுபொம்மை ஸ்பெஷலா சரஸ்வதி பிரம்மாவை உருவாக்க வெச்சுடுவோம்!
முருகன்....என் மாமாக்கு அடிச்ச அதிர்ஷ்டம்.எந்தக் கவலையும் இல்லாம ஜாலியா ராஸக்ரீடை பண்ணிண்டிருக்காரே.ஹ்ம்ம்..
கண்ணன்...ஏன் அலுத்துக்கற முருகா. வள்ளி, தெய்வானை எங்கே?
முருகன்....ரெண்டு பேரும் நவராத்திரி விரதம்னு சொல்லிட்டு அவா பிறந்தாத்துக்கு போயாச்சு.
ராமர்....இந்த வீட்டில பாயசம்,சுண்டல்,பட்சணமெல்லாம் செம டேஸ்ட்டு. இங்கயே பெர்மனென்ட்டா இருந்துடப் போறேன்.
சிவன்....அதான் நன்னா சாப்பட்றவாளை 'சாப்பாட்டுராமன்'ங்கறா!
ராமர்...ஹி.ஹி...
சீதை...மூணு அம்மாக்களுமா விதவிதமா சமைச்சுப் போட்டு நாக்கை வளர்த்து வெச்சிருக்கா. காட்டுல அடுப்பை ஊதி ஊதி நான் இவருக்கு சமைச்சுபோடறதுக்குள்ள போறும்னு ஆய்டுத்து!
பக்கத்தில் ஏதோ கசமுசவென்று சத்தம்...
முருகனும், கணபதியும் அடுத்து இருந்த திருமணம் நடக்கும் பொம்மைகளிடம் போய் பேட்டி எடுத்தனர்.
முருகன்...வருஷாவருஷம் கல்யாணமா உங்களுக்கு?
மாப்பிள்ளை....பணம் கிடைத்தா தினமும் கூட பண்ணிக்கலாமே!
கணபதி...எவ்வளவு குழந்தைகள்?
மாப்பிள்ளை....நாலஞ்சு இருக்கு. எல்லாரும் இந்த கொலுவிலதான் அங்கங்க இருப்பாங்க.
செட்டியாரம்மா....நேத்து ஒரு அம்மா பச்சைகலர்ல ஒரு பட்டு புடவை கட்டிட்டு வந்தாங்களே.அது போல ஒரு புடவைவாங்கித்தாங்க!
செட்டியார்....இந்த வருஷ வியாபாரம் சரியில்ல. டூப்ளிகேட் பட்டு வாங்கிக்க!
செட்டியாரம்மா...இங்க நாமளே அப்டிதான!!😢
முருகனும்,பிள்ளையாரும் மொபைலுக்காக சண்டை போட்டு ஓடியதில் zooவில் இருந்த மிருகங்கள் பயந்து ஓட ஆரம்பித்தன.
திடீரென் ஏதோ பேச்சுக் குரல் கேட்க
எல்லாரும் அவரவர் இடத்தில் போய் நின்றனர்.
'ஏதோ சத்தம் கேட்டுதே'என்று பாதி தூக்கத்தில் எழுந்து வந்த வீட்டு எஜமானர் கண்ணைக் கசக்கிக் கொண்டு சுற்றிலும் பார்த்து விட்டு திரும்பிப் போய் படுத்து விட்டார்.
முருகனும், கணபதியும் அடுத்து குறவன், குறத்தியிடம் தம் பேட்டியை ஆரம்பித்தனர்.
கணபதி...இந்த கொலுவில எத்தனை வருஷமா இருக்கீங்க?
குறவன்...ஒரு பத்து வருஷம் இருக்கும் ஷாமி.
குறத்தி...ஏன் சாமி..உங்க தம்பிதான எங்க சாதிப் பொண்ணை கல்யாணம் கட்டிக்கிச்சு?
கணபதி...ஆமாம்.அதோ நிக்கிறானே அவன்தான்.
குறவன்...நல்லா இருக்கட்டும் ஷாமி.
முருகன்...சங்கீத மும்மூர்த்திகளிடம்...மாமா நீங்கள்ளாம் சௌக்யமா?
தியாகய்யர்....என்னத்தை சொல்ல.நேத்து ஒரு பெண்மணி என் பாட்டை பாடினா. தவறான உச்சரிப்பு. தாளமில்லாத பாட்டு. சரியில்லாத ராகம். எழுந்து ஓடமுடியாம உக்காந்திருக்கேன்.😵
'நீங்கள்ளாம் யாரு? எந்த ஊரு?'..கீழே இருந்த பொம்மைகளைப் பார்த்துக் கேட்டார் கணபதி.
நாங்கள்ளாம் art from waste ல் உருவானவர்கள். குப்பைத் தொட்டியிலும், சாக்கடையிலும் இருக்க வேண்டிய எங்களை இப்படி அழகான உருவங்களா மாத்தி உங்களுடன் வெச்சிருக்காங்களே.அதுவே எங்க அதிர்ஷ்டம்!
.
பார்வதி....எல்லாரும் அவாவா இடத்துக்கு போங்கோ. . நாளைக்கு நம்ம எல்லாரையும் பெட்டில வெச்சு அடுக்கிடுவா. அடுத்த வருஷம்தான் நாம பார்த்துக்க முடியும்.
கொலுவில் இருந்த மிருகங்கள் அங்குமிங்கும் சென்று கொலுவை ரசித்தன.
எல்லோரும் அவரவர் இடம் செல்ல, முருகன் மட்டும் மொபைலில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்!
பார்வதி....முருகா! நான் சொன்னது காதில் விழலயா?
முருகன்....இதோ போறேம்மா!
கணபதி....அப்படி என்னதான் எழுதற?
முருகன்....FBல மத்யமர்னு ஒரு க்ரூப் இருக்கு. அதில போஸ்ட் போட்டிண்டிருக்கேன்.
கணபதி....எனக்கு தெரியாதே.அதுல என்ன ஸ்பெஷல்?
முருகன்....அம்மா, அப்பாவை மட்டுமே சுத்தி வந்துண்டிருந்தா உனக்கு என்ன தெரியும்? என்னை மாதிரி உலகத்தை சுற்றி வரணும்!
பார்வதி....அதைப் பற்றி சொல்லேன் முருகா.
முருகன்....அதில் நல்ல போஸ்ட்டை தேர்ந்தெடுத்து POTWனு சர்ட்டிஃபிகேட் கொடுப்பா. நல்ல விஷயங்களை ஷேர் பண்ணினா GEM ஆகலாம். இந்தாத்து மாமிக்கு கூட POTW கிடைச்சிருக்காம். அவா சந்தோஷத்தில வரவா, போறவாகிட்டல்லாம் இதைப் பற்றி சொல்லிண்டிருக்கா! நானும் அதில join பண்ணிருக்கேன்.
எல்லா தெய்வங்களும் கோரஸாக....நாமெல்லாம் இப்போ மேல் லோகத்திலயோ, பாதாள லோகத்திலயோ இல்லாம மத்தியில் பூலோகத்திலதான இருக்கோம். அதனால நாமும் மத்யமர்தான்!நாம எல்லோரும் மத்யமர்ல சேர்ந்து டுவோம்!
ராதாபாலு

No comments:
Post a Comment