ஆய கலைகள் அறுபத்து நாலில் சமையலும் ஒன்று. பீம பாகம்,
நளபாகம் என்று ஆண்களே அக்காலத்தில் சமையல் வல்லுனர்களாக இருந்திருக்
கிறார்கள். திரௌபதி ரொம்பவே சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிட்டிருப்பாளோ! ஐந்து கணவரும் வகை வகையாக சமைத்து...திரௌபதி சாப்பிட வாம்மா...என்று அன்பொழுகக் கூப்பிட்டு ஆசையுடன் பரிமாறி இருப்பார்களோ!! தமயந்தியும் கொடுத்து வைத்தவள். நளன் ராஜ்ய பரிபாலனத்துடன் சமையலும் செய்திருப்பானோ!!
இன்றும் திருமணம் போன்ற பெரிய விழாக்களில் ஆண்கள்தானே சமைக்கி
றார்கள்.அன்று ஆண்கள் வசம் இருந்த சமையல் பெண்கள் மேல் திணிக்கப்பட்டதோ..அல்லது பெண்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்களோ..யாருக்கு தெரியும்!!
என் கணவர் ஓரளவு அடிப்படை சமையல்கள் செய்வார். என் பிள்ளைகளும் நன்றாகவே சமைப்பார்கள். பெரிய பிள்ளை பொங்கல் செய்தால் அதில் ஏகப்பட்ட ட்ரைஃப்ரூட்ஸ் போட்டு நெய்யைக் கொட்டி பண்ணுவான்! டீயை பாலிலேயே கொதிக்க விட்டுப் போடுவான்! ப்ரெட், கேக் எல்லாம் சூப்பராக செய்வான்.
என் மாட்டுப் பெண்ணும் பிஸ்ஸா, கேக் எல்லாம் நிறைய வெரைட்டி செய்வாள். நாங்கள் ஜெர்மனி சென்றால் எங்களுக்காக Eggless cake செய்வாள்.
சென்னையில் இருக்கும் அடுத்த பிள்ளை Bread making classக்கு சென்று கற்றுக் கொண்டும், YouTube பார்த்தும் விதவிதமாய் செய்கிறான். ஆர்கானிக் ப்ரெட் தயாரித்து கடைகளுக்கு supply செய்து கொண்டிருந்தான்.
இப்பொழுது கொரோனா lock downல் மாலை நேர snacks ப்ரெட்தான்!! இட்லி, தோசை போரடித்துப் போன பேரன் பேத்திகள் இந்த வித்யாசமான snackஸை நன்கு enjoy செய்கிறார்கள்!
என் மகளுக்கும் ஆர்வம் அதிகரிக்க அவள் வடா பாவ், பானிபூரி, கப் கேக் என்று ஜமாய்க்கிறாள்! தினமும் எனக்கு வாட்ஸப்பில் அனுப்பும் அவர்கள் செய்த Lock down special ரெசிபிகளை நீங்களும் பார்த்து ரசியுங்கள்!!
இன்று நான் செய்தது simple & easy நட்ஸ் பக்கோடா.
ஜில்ஜில் பலாப்பழ பாயசம்
மசாலா தட்டை
தேவை
புழுங்கல் அரிசி -- 1 கப்
பொட்டுக்கடலை பொடி -- 1/2 கப்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு -- 2 டீஸ்பூன்
மிளகுப்பொடி --1/2 டீஸ்பூன்
காரப்பொடி -- 1/2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி -- சிறிது
உப்புபொடி -- தேவையான அளவு
விழுது நெய் --2 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை -- 1 கொத்து
எண்ணை -- பொறிக்க
மசாலாவிற்கு
பச்சை மிளகாய் -- 3
இஞ்சி -- சிறு துண்டு
இரண்டையும் நைசாக அரைக்கவும்.
செய்முறை
அரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.
அத்துடன் பொட்டுக்கடலை மாவு, அரைத்த மசாலா, ஊறவைத்த கடலைப் பருப்பு, கருவேப்பிலை, மிளகுப்பொடி, காரப்பொடி, சீரகம், பெருங்காயம், நெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.
சிறு உருண்டை எடுத்து வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் சிறு தட்டைகளாகத் தட்டி முள் கரண்டியால் சிறு ஓட்டைகள் போடவும். எண்ணையைக் காயவைத்து பொன்னிறமாகப் பொறித்து, எண்ணை
வடிந்ததும் எடுத்து வைக்கவும்.
சூப்பரான கரகர தட்டை வாயில் போட்டால் கரையும்!
பலாப்பழ பாயசம்..
ஒரு பலாசுளையை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
10-12 பலாசுளைகளை கொட்டை நீக்கி நறுக்கி 10 நிமிடம் நீரில் வேகவிட்டு ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் சிறிது நீர் சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் அத்துடன் வெல்லம் தேவையான அளவை நீரில் சுடவைத்து வடிகட்டி சேர்க்கவும்.
அரை கப் தேங்காய்ப் பால் சேர்த்து
5 -10 நிமிடம் கொதித்ததும் அரை கப் பால் சேர்க்கவும்.
ஏலப்பொடி, மிந்திரி திராட்சை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
பலாப்பழ பாயசம் ஃப்ரிட்ஜில் வைத்து கப்பில் விட்டு கூலாக சாப்பிட தேவாமிர்தம்தான்!!
No comments:
Post a Comment