Wednesday 28 August 2019

உமையாள்புரம்

இதிகாச புராண பிரசித்தமான தலங்களுள் தஞ்சை காவிரியின் வடகரையிலுள்ள உமையாள்
புரமும் ஓன்று. இங்குள்ள சிவன், பெருமாள் கோயில்கள் மிக பிரசித்தமானது.

இங்கு காவிரிக்கரையில் கோயில் கொண்டுள்ள ஆனந்த மகா
கணபதியின் பெருமையை சொல்ல வார்த்தைகளில்லை!

சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு இந்த கணபதி ஓர் அரச மரத்தி
னடியில் இருந்ததாகவும், அம்மரம் ஒருநாள் விநாயகருக்கு சிறிதும் சேதமின்றி வேருடன் விழுந்து விட்டதாம். சுவாமிகள் ஒருவர் யந்திரம் ஒன்றை வைத்து கணபதியை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. 1931ம் ஆண்டு சிறிய ஆலயம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இவ்வாலயம் என் நாத்தனார் குடும்பத்தாரால் மிக சிறப்பாக பராமரிக்கப்பட்டு தினசரி பூஜைகள் நடைபெறுகின்றன.

அழகிய உருவத்துடன் காட்சிதரும் கணபதியின் முன் நிற்கும்போது நம் இடர்கள் அனைத்தும் மறைந்து விட்ட உணர்வு ஏற்படுகிறது. நாம் வேண்டியவைகள் அனைத்தும் அக்கணமே நிறைவேறிவிட்டதைப் போல் மனம் நிறைந்து விடுகிறது.

மாதந்தோறும் சங்கட ஹர சதுர்த்தி அன்று இரவு அபிஷேக ஆராதனையும்,ஒவ்வொரு வருஷமும் ஆவணி அமாவாசைக்கு முன்பு நடை பெறும் நிறைமணி என்ற ஒரு நாள் உத்ஸவமும்,
பிள்ளையார் சதுர்த்தியும் மிக விமரிசையாகக் கொண்டாடப்
படுகின்றன.

நிறைமணி அன்று காலையில் சிறப்பான அபிஷேக, அலங்
காரமும், இரவில் நடைபெறும் புஷ்பலங்காரமும் கண்கவர் காட்சியாகும். சின்ன உருவில் சிங்காரமாய் அமர்ந்து  அன்பர்களின் துன்பங்களைத் தீர்த்து வேண்டிய வரங்களை வாரி வழங்கும் கற்பக விருட்சமான ஆனந்த மகாகணபதி, அவ்வூர் மக்களுக்கு மட்டுமன்றி,
அருகிலுள்ள கிராம மக்களின் வேண்டுதல்களையும் நிறைவேற்றி அருள்பவர்.

இவ்வருட நிறைமணி உத்சவம் கடந்த ஞாயிறு அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. அன்று மாலை அர்ச்சனா, ஆர்த்தி சகோதரிகளின் இசைக்கச்சேரி கண்ணுக்கு விருந்தான புஷ்ப அலங்காரத்துடன், காதுகளுக்கும் இனிய விருந்தாக இருந்தது.



No comments:

Post a Comment