நம் உள்ளத்து உணர்வுகளை ‘பளிச்’சென வெளிக்காட்டுவது நம் முகம். அந்த முகம் எப்போதும் சிரித்துக் கொண்டே இருந்தால் எத்தனை அழகாக இருக்கும்?😀
ஒரு புன்னகை சிந்த விலையேதும் தேவையில்லை. ஆனால். அந்த ஒரு புன்னகை அவரை பெரிய கூட்டத்திலும் கூட நடுநாயக
மாக்கும் தன்மையுடையது.😃
மாக்கும் தன்மையுடையது.😃
உடலில் 300 வகையான தசைகள் சிரிக்கும்போது அசைகின்றன. அதனால் நம் மனமும் தேகமும் சிரிக்கும்போது புத்துணர்ச்சியும் , ஆரோக்கியமும் பெறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.😆
ஆய்வொன்றின் படி ஒரு நாளைக்கு சராசரி மனிதன் 15 தடவைகளும் குழந்தைகள் கிட்டத்தட்ட 400 தடவைகளும் சிரிக்கின்றோமாம். இதிலிருந்து மனிதனுடைய வயதிற்கேற்றவாறு சிரிப்பு குறைந்துகொண்டு
போவதை அறிய முடிகிறது. 😄
போவதை அறிய முடிகிறது. 😄
நாம் சிரிக்கும்போது 'என்டோர்பின்ஸ்' என்னும் திரவப்பொருள் நம் மூளையில் உருவாகி ஒருவகையான நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.😆
‘சிடுசிடு’வென்ற முகத்துடன் இருப்பவரை யார்தான் விரும்புவர்? சிரிப்பதற்கு கஞ்சப் படுபவர்கள் பல சந்தோஷங்களை வாழ்வில் இழந்தவர்களாவர். சிரிப்பதற்கு ஆகும் நேரம் சிறிது; ஆனால், அதன் பலனோ மிகப் பெரியது!🤩
வாயால் சொல்லும்வரை காதல் புரிவதில்லை! அது போல் புன்னகை புரியும் வரை அதற்கு மதிப்பில்லை! 😍
புன்னகையை விலைக்கோ, கடனுக்கோ வாங்க முடியாது. திருடவும் முடியாது! 😁
ஒரு சின்னக் குழந்தையின் சிரிப்பு நம் கவலைகளை மறந்து அதனுடன் விளையாடத் தூண்டுவதை நம்மால் மறுக்க முடியுமா!👶
முதியவர்களின் சிரிப்போ அவர்களது வெற்றிகரமான வாழ்வின் பிரதிபலிப்பு!👴
மோனாலிசாவின் மயக்கும் சிரிப்பை மறக்க முடியுமா?😄
ஃபெங்ஷுயி சிரிக்கும் புத்தரைப் பார்க்கும்போதே நம் மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறதே!💃
வாழ்க்கையை சிரித்துக் குதூகலித்துக் கடக்க வேண்டும் என்பதைச் சொல்வதைப் போல இவர் சிரித்துக் கொண்டே இருக்கிறாராம்! இவர் உருவம் வீட்டில் இருந்தால் வளமும், மகிழ்ச்சியும், செல்வமும்
வீட்டில் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை!💷
வீட்டில் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை!💷
மருத்துவர் மற்றும் நர்ஸூகளின் பரிவான புன்னகை எத்தனை பெரிய நோயாளியையும் சீக்கிரம் குணமடையச் செய்யும்! 😌
காதலர்களுக்கிடையே, தம்பதிகளுக்கிடையே ஏற்படும் மன வேறுபாட்டை நிமிடத்தில் விலக்கி, உடைந்த இதயங்களை இணப்பது அன்பான காதல் புன்னகையே!❤️
வரவேற்பாளர்களின் புன்னகை இனிய வரவேற்பு! 🧛
விற்பனையாளார்களின் புன்னகை அவர்களின் வியாபார உத்தி! 🤵
சிரித்த முகத்துடன் இருப்பவர்களை உலகில் எவரும் விரும்புவர்!😊
நிறைவான மனதுடன், மகிழ்ச்சியாக வாழும் மனிதனால்தான் சிரித்த முகத்துடன் உலவ முடியும். அவர்களுக்கு வாழ்க்கையே ஒரு திருவிழா! அவர்களோடு பேசுபவர்களுக்கும், பழகுபவர்களுக்கும் கூட அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.😄
மனம் நிறைந்த மகிழ்ச்சியால் மலரும் புன்னகை எவரையும் வசப்படுத்தும்! சின்னப் புன்னகை பெரிய காரியங்களைக்கூட நிறைவேற்றும்!😊
நம் அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.நாம் எந்த
விஷயத்தையும் எப்படி அணுகுகிறோமோ, அதன்படிதான் விளைவுகளும் இருக்கும். நம் முகத்தின் ஒரு சின்ன வளைவு, பல பிரச்சினைகளை நேராக்கும் தன்மையுடையது.☺️
விஷயத்தையும் எப்படி அணுகுகிறோமோ, அதன்படிதான் விளைவுகளும் இருக்கும். நம் முகத்தின் ஒரு சின்ன வளைவு, பல பிரச்சினைகளை நேராக்கும் தன்மையுடையது.☺️
பொய்யும் புன்னகையும் உடன் பிறந்தவை! பிடிக்காதபோது பொய்யாக புன்னகைக்கலாம்! மகிழ்ச்சியாக இருப்பதாக பொய்யாகப் புன்னகைத்தும் காட்டிக் கொள்ளலாம்!🙂
நம் மனதில் கவலையும், துன்பமும் தோன்றும்போதெல்லாம் 'இதுவும் கடந்து போகும்' என்பதை நினைவில் கொண்டால் முத்தில் சுருக்கங்கள் நீங்கி புன்னகை தவழ்வதை உணரலாம்!😉
எந்த விஷயத்துக்கும் கோபப்படாமல், சிடுசிடுக்காமல், மலர்ந்த முகத்துடன் காணப்படுவது ஒரு சிறந்த கலை. அதற்கு நல்லெண்ணெங்கள், கடவுள் நம்பிக்கை, திருப்தியான மனநிலை ஆகியவை அவசியம்.🤓
‘நாம் ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும் நம் ஆயுள் கூடுவதாக’க் கூறப்படுவதால், இன்று சிரிப்பதற்குக் கூட சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன! 😁
எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் மனம் திறந்து மகிழ்ச்சியாக சிரித்துப் பேசுங்கள். அனைவரும் உங்களை விரும்புவர். பிறர் சிரிக்கும்படி வாழாமல், சிரித்து வாழுங்கள்!😆🤩
No comments:
Post a Comment