சகுந்தலை-துஷ்யந்தன்..இது நமக்கு தெரிந்த கதை. இவர்கள் மகன்தான் பரதன். விசுவாமித்திரர்..மேனகையின் மகளான சகுந்தலை கண்வ முனிவரால் வளர்க்கப் பட்டாள். அப்பொழுது வனத்திற்கு வேட்டையாட வந்த துஷ்யந்தனிடம் காதல் வயப்பட்டு இருவரும் காந்லர்வ மணம் புரிந்து கொண்டனர். துஷ்யந்தன் பிரியும்போது மோதிரம் கொடுத்துச் செல்லும் காட்சியே இந்த ஓவியம்.
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு காகிதத்தில் வரைந்த ஓவியம். வரிசையாக பண்டிகைகள். பொறுமையாக வரைய நேரமில்லை. மத்யமரில் பல ஜாம்பவான்களின் அற்புதமான ஓவியங்களுடன் இது போட்டி போட முடியாது என்று தெரிந்தாலும், பங்கு கொள்வதே ஒரு சந்தோஷம் என்பதே என் எண்ணம்.
இப்படி வரையும் வாய்ப்பை அளித்த மத்யம அட்மின்களுக்கு நன்றி!
No comments:
Post a Comment