Wednesday, 28 August 2019

அன்பு முரளி


அன்பு முரளி
இன்று காலை முதல் நீ பிறந்த அந்த நாள்தான் என் நினைவில்.கோகுலாஷ்டமியன்று நம் அம்மா கண்ணனை வரவேற்க அத்தனை பட்சணமும் செய்து வைத்து விட்டு ஆஸ்பத்திரி சென்ற அந்தநாள் மறக்க முடியுமா? 
அன்று மாலை நம் வீட்டின் குட்டிக் கண்ணனாக நீ பிறந்தாய். உன் பெயரும் அதனால்தான் முரளி! உன் பிஞ்சுக் கையைத் தொட்டுப் பார்த்தபோது நான் அடைந்த சந்தோஷம் இன்றும் என் மனதில்!
மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா!
அன்புத்தம்பியே!
இன்று போல் என்றும் நீ
இளமையுடன் இன்பமுடன்
வளமையுடன் மகிழ்ச்சியுடன்
பாங்குடனே வாழ்வில்
சீரும் சிறப்பும்
பேறும் புகழும்
பெருமையும் திறமையும் இறையருளால் பெறுவாய்!
உன் கனவுகளும் ஆசைகளும்
கச்சிதமாய் நிறைவேறி
*வாகைசூடி சரித்திரம் படைத்திடவும்*
*வானம் தொடும்
புகழ் அடைந்திடவும்*
*வசந்தமான வாழ்வு
நிலைபெறவும்*
வாழ்த்துகிறேன்
தாங்கொணா மகிழ்ச்சியுடன்
தமக்கை நான்!
உன் வாழ்க்கை பந்தயத்தில்
புது உலகம் படைக்கவும் ,
சாதனைகள் நிறைக்கவும்,
தொட்ட இடம் எல்லாம்
சிறக்கவும் வாழ்த்துகிறேன்!
ஒவ்வொரு ஆண்டும்
புதுப்புது சொந்தங்கள்,
புதுப்புது கனவுகளுடன்
உன்னை விரும்புவோரெல்லாம்
உன்னை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள்.
இன்று உன் வயது மட்டுமல்ல,
உன் கனவுகள், ஆசைகள்,
பொறுப்புகள் போன்றவையும்
கூடுகிறது...,
அவைகளெல்லாம்
உனக்கு இந்த ஆண்டு
மட்டுமல்லாமல்
இனி வரும்
அனைத்து
ஆண்டுகளிலும்
நிறைவேறிட
வாழ்த்துகிறேன்.💐💐🌺🌸🍰🎂

No comments:

Post a Comment