மங்கையர் மலருடனான என் மலரும் நினைவுகள் பலப்பல. எதைச் சொல்லது?
என் எழுத்துலகப் பிரவேசம் ஆரம்பமானதே மங்கையர் மலரில்தான். ஒன்றா..இரண்டா? கிட்டத்தட்ட 150க்கு மேற்பட்ட கதை, கட்டுரைகள், பயணக் கட்டுரைகள்! மற்ற தமிழ் இதழ்களிலும் நான் எழுதுவதற்கு ஆதாரம் மங்கையர் மலரே!
மங்கையர் மலர் வெளிவர ஆரம்பித்தது முதலே நான் எழுதிய சிறு துணுக்குகள் பிரசுரமா
னாலும், '40 வயதுப் பிரச்னை' என்ற தலைப்பில் என் அம்மா மெனோபாஸினால் கஷ்டப்பட்டதைப் பற்றி நான்
எழுதிய முதல் கட்டுரை பிரசுர
மானபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதற்கான சன்மானமாக 25 ரூ. M.O. வந்தபோது வானில் பறந்தேன்! வாசிப்பில் எனக்கு ஆசையை ஏற்படுத்திய என் அம்மாவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்!
பல கட்டுரைகள், இம்மாத இல்லத்தரசி போட்டி, புடவைப் போட்டிகளில் நிறைய முறை பரிசுகள் வாங்கியுள்ளேன்.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொலுப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது முத்தாய்ப்பானது.
என் கணவர் வேலை பொருட்டு மதுரா,ஆக்ராவில் இருந்தபோது என் பிறந்த வீடு சென்று திரும்பும்போதெல்லாம் ஒரு பெட்டி நிறைய புத்தகங்கள் எடுத்து வருவேன்.
புதிய புத்தகத்தை வாங்கியவுடன் பிரித்து முகர்ந்து பார்ப்பதும், ஏதாவது கொறித்துக் கொண்டே அதை ஆற அமரப் படித்து ரசிப்பதும் இன்றும் தொடரும் என் வழக்கம்! நான் இன்று ஒரு எழுத்தாளராகக் காரணமாயிருந்து என்னைப் பலரும் அறியச் செய்த மங்கையர் மலருக்கு மனமார்ந்த நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன்🙏
No comments:
Post a Comment