Sunday, 9 February 2020

இனிய சந்தோஷம்

நேற்று என் பேரன் 'பாட்டி உனக்கு Mojito Mocktail பண்ணித் தரேன். சூப்பரா இருக்கும்.குடிச்சுப் பாரு' என்றான்.நான் 'என்னது மோக்டெய்லா?அப்படின்னா?' என்றேன்! அவனோ 'பயப்படாத. அதில் ஆல்கஹால் இல்ல. ஸோடா சேர்த்து பண்ற ஜூஸ்' என்றான். என்ன செய்கிறான் என்று கூட இருந்து பார்த்தேன்.

சில புதினா இலைகள், சர்க்கரை, எலுமிச்சை துண்டுகள் சேர்த்து நசுக்கி அதில் எலுமிச்சை சாறு,soda,icecubes சேர்த்து கலக்கி இரண்டு glass களில் ஊற்றி என்னிடம் ஒன்றைக் கொடுத்து 'Cheers..குடி பாட்டி' என்றான். அருமையாக இருந்தது mocktail! நம் குழந்தைகள் செய்து கொடுத்து சாப்பிடுவதை விட பேரன், பேத்திகள் செய்து கொடுத்து சாப்பிடுவதில் சந்தோஷம் ஜாஸ்திதான்!






No comments:

Post a Comment