Sunday 2 February 2020

பள்ளியில் மறக்க முடியாத சம்பவம்

நான் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்த சமயம். ஆண்டு இறுதியில் 11ம் வகுப்பு மாணவிகளுக்கு நாங்கள் party கொடுத்து சீனியர்களுக்கு bye..bye..சொல்லி அனுப்புவது வழக்கம்! அவர்கள் தம் அனுபவங்கள், ஆசிரியைகளைப் பற்றி   பேசுவார்கள்.


அந்த முறை ஒரு மாணவி எங்கள்ஆசிரியைகளின் குணங்கள் மற்றும் அவர்கள் நடப்பது பேசுவது பற்றியெல்லாம் நடித்தும், மிமிக்ரி செய்தும் காட்டினாள். ஆசிரியைகளும் நாங்களும் ரசித்து சிரித்து மகிழ்ந்தோம்! ஒரு ஆசிரியை நடக்கும்போது இரு பாதங்களையும் இணைத்து வைத்து குனிந்தவாறே நடப்பார். மிக அமைதியானவர். அதிகம் பேசமாட்டார்.

மறுநாள் முதல் அந்த ஆசிரியை தன் நடையையே மாற்றிவிட்டார். அவர் மிக கஷ்டப்பட்டு நடையை மாற்றி நடப்பது புரிந்தது. எல்லா ஆசிரியைகளும் அந்த நிகழ்ச்சியை sportive ஆக எடுத்துக் கொள்ள அந்த ஆசிரியை மட்டும் தன்னைப் பரிகசிப்பது போல உணர்ந்து விட்டார் போலும். பள்ளி நாட்களை நினைக்கும்போது இந்த சம்பவம் என்னால்  மறக்க முடியாதது.

No comments:

Post a Comment