வேலன்டைன்ஸ்டே அன்று ஹைதராபாதிலுள்ள பிரசித்தமான விசா பாலாஜியை தரிசிக்கச் சென்றோம்.பெயரே வித்யாசமாக இருக்கிறதில்
லையா? ஆம்..வெளிநாடு செல்ல விசா கிடைக்காவிட்டாலோ, தாமதமானாலோ இவ்வாலயம் வந்து இந்த பாலாஜியை தரிசித்தால் உடன் தடங்கல் நீங்கி விசா கிடைக்குமாம்.
ஹைதராபாதிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் 'உஸ்மான் சாகர்' என்னும் ஏரிக் கரையில் அமைந்துள்ள சில்கூரில் அமைந்துள்ள ஆலயத்தின் பெருமை பெரிதினும் பெரிது!
தெலுங்கானாவிலுள்ள மிகப் பழமையான 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலை பக்த ராமதாசரின் மாமன்களான வெங்கண்ணாவும், அக்கண்
ணாவும் கட்டியதாகக் கூறப்
படுகிறது. காலப் போக்கில் அழிந்துவிட்ட அக்கோயில் 500 ஆண்டுகளுக்கு முன்பு கண்டு
பிடிக்கப் பட்டது.
மாதவ ரெட்டி என்ற பக்தர் அறுவடை முடிந்தபின் தவறாமல் திருப்பதி செல்லும் வழக்க
முடையவர். திரும்பியதும்தமது நிலத்தில் விளைந்த பொருட்
களின் ஒருபகுதியை தானம் செய்யும் வழக்கமுடையவர். முதுமையில் செல்ல முடியாமல் வருத்தமுடன் நிலத்தில் அமர்ந்தி
ருக்கும்போது பாலாஜி அவர் கனவில் தோன்றி 'இனிமேல் திருப்பதிக்கு நீ வரவேண்டாம். நானே உன் வயலில் உள்ள எறும்பு புற்றினுள் குடி கொண்டிருக்
கிறேன்' எனக்கூறி மறைந்தார்.
மறுநாள் புற்றை அகற்றியபோது பூதேவி, ஸ்ரீதேவி சமேதகராக திருப்பதி பாலாஜியின் திருமணக் கோலச் சிலையைக் கண்டு ஊர்மக்கள் கூடி ஆகமவிதிப்படி ஆலயம் உருவாக்கினார். இப்பொழுதும் பெருமாள் தலையில் கடப்பாரை வெட்டு இருக்கிறதாம்.
இவர் 'விசா பாலாஜியானது எப்படி?' வெளிநாடு செல்ல விரும்புவோர், பெருமாள் காலடியில் பாஸ்போர்ட்களை வைத்து வணங்கி வேண்டிக்
கொண்டால் உடனே வேண்டுதல் நிறைவேறுமாம்.
இதற்கு ஒரு முறை உண்டு. வெளிநாடு செல்ல முக்கியமாக அமெரிக்க விசா கிடைக்க வேண்டிக் கொள்பவர்கள் 11 சுற்றுகள் சுற்ற வேண்டும்.பின் விசா கிடைத்தபின் 108 சுற்றுகள் சுற்றி பிரார்த்தனையை முடிக்க வேண்டும். மேலும் திருமணம், குழந்தை வேண்டியும் இங்கு வேண்டிக் கொண்டு பிரார்த்தனை நிறைவேறியதும் 108 பிரதட்சிணங்கள் செய்ய வேண்டும்.
இங்கு எப்பொழுதும் கூட்டம்! ஆயிரக் கணக்கானோர் ஆலயத்தை சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கணக்கு வைத்துக் கொள்ள ஆலயத்தில் ஒரு எண்கள் எழுதிய அட்டை தரப்படுகிறது. அங்குள்ள ஜன நெரிசலே அந்த ஐயனின் பெருமையை உணர்த்துகிறது.
இங்கு உண்டியல் இல்லை. VIP க்க
ளுக்கு சிறப்பு தரிசனம் கிடையாது. மற்றுமொரு விசேஷ அம்சமாக இந்த கோயிலின் நிர்வாகமும் மத்திய, மாநில அரசாங்கத்தின் அறநிலையத்துறை கட்டுப்
பாட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
இந்தக் கோயிலுக்கு வாரந்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அருகில் அழகிய கைலாசநாதர் கோயில் ஒன்றும் உள்ளது. இதனருகில் இருந்த புற்றிலி
ருந்துதான் பெருமாள் எடுக்கப் பட்டாராம்.
மனதிற்கினிய தரிசனம் முடித்ததும் வயிறு 'என்னையும் கொஞ்சம் கவனி' என்று கூற, ஹோட்டலுக்கு சென்றோம்.
ஹைதராபாதில் நான் கண்டு வியந்த விஷயம் ஊர் முழுதும் ஏகப்பட்ட ஹோட்டல்கள்! எங்கெங்கு நோக்கினும் ஹோட்டல்கள்!! விதவிதமாய் சாப்பாடு!! அத்தனை மாநில, வெளிநாட்டு சாப்பாடுகள் விதவிதமாய்க் கிடைக்கிறது. எந்த ஹோட்டல் போகலாம் என்று யோசிக்க வேண்டியுள்ளது!
நாங்கள் மெட்ரோ பில்லர் அருகிலுள்ள Gud Gudee (Tickling your taste buds என்று அர்த்தம்!) என்ற ஹோட்டலுக்கு சென்றோம். அன்று Valentine's day க்காக ஸூப், starters, Main course எல்லாமே ஸ்பெஷலாம்! காஷ்மிரி நான், ப்ளூ ஷூ ஜுஸ், கமல் கலோட்டி
( தாமரை தண்டு கபாப்),வெஜ் டகாடக் என்று எல்லாமே இதுவரை எந்த ஹோட்டலிலும் சாப்பிடாத சுவையில் இருந்தது!
நான் சென்று சாப்பிட்ட சில ஹோட்டல்கள்...
99 Dosa Hubல் 99 வகையான விதவிதமான தோசைகள்..எதை சாப்பிடுவது என்று ஒரே dilamma!
Variety panipuri..ஐயப்பா ஸொசைட்டியிலுள்ள இந்தக் கடையில் 7 வித பானிபூரி..ஒவ்வொன்றிலும் வித்யாசமாக..இஞ்சி..பூண்டு..புதினா..எலுமிச்சை..நார்மல் என்று விதவிதமான பானிகளுடன் குட்டி பூரிகள் சுவையோ சுவை!
தந்தூரி மட்கா சாய்..டீயை தந்தூரி அடுப்பில் சுடவைத்து மண்குவளைகளில் குடிப்பது..அருமையான சுவை!
சட்னி...மாதாபூரிலுள்ள இந்த ஹோட்டலில் பல தினுசு சட்னிகள்
Cloud Dine...இது ஒரு வித்யாசமான அனுபவம் தரும் ஹோட்டல். ஹைதராபாதில் ஹைடெக் சிட்டியில் ஜெர்மன் டெக்னாலஜியில் உருவாக்கப்
பட்ட முதல் Cloud Dine ஹோட்டல். 26 இருக்கைகள் மட்டுமே! 160அடி உயரத்தில், பெல்ட்டுகள் இணைத்த நாற்காலியில் க்ரேன் மூலம் மேலே அழைத்து செல்லப் பட்டு, வெட்ட வெளியில் ஜில்லென்ற காற்றில் உயர்ந்து நிற்கும் பக்கத்து கட்டிடங்களையும் அருகிலுள்ள ஃப்ளை ஓவர்களையும் நோட்டமிட்டபடி சாப்பிடலாம். ஒரு சாப்பாட்டின் விலை..அதிகமில்லை..
5000 ரூபாய்தான்!! (இந்த முறை போகவில்லை. அடுத்த முறை ட்ரை பண்ண ஆசை!)
Platform 65..Train Restaurant குக்கட் பள்ளி என்ற இடத்திலுள்ள இந்த ஹோட்டலில் இடையிலுள்ள தண்டவாளங்களில் வரும் toy trainல் உணவு கொண்டு வரப்பட்டு பரிமாறப் படுகிறது!
இதுபோல் விதவிதமாய் ஹோட்டல்கள்! வித்யாசமான ருசியில் உணவு! இங்குள்ளோர் வாழ்க்கையை ரசித்து மட்டுமல்ல..ருசித்தும் வாழ்கிறார்கள்!!
No comments:
Post a Comment