மாதங்களில் நான் மார்கழி' என்ற மகாபாரதக் கண்ணனுக்கு பிடித்த இம்மாதத்தில் அல்லன நீக்கி நல்லன செய்ய வேண்டும் என்பதை பஜனை, ஆலய வழிபாடு, கோலம், விடிகாலை பூஜை என்றெல்லாம் வைத்திருக்கிறார்கள் நம் பெரியோர்.
மார்கழியில் தேவர்கள் பூலோகம் வரும் நாளாக உரைக்கிறது ஆன்மிகம். அந்நாளில் இறைவனை அதிகம் பூசிப்பதால் முக்தி கிடைக்கும் என்பது மெய்ஞானம். மார்கழி மாதத்தில் விடிகாலை காற்றில் ஓஸோன் அதிகமிருப்பதால் உடலுக்கு
நல்லது என ஆராய்ச்சிகளால் அறிய வைத்தது விஞ்ஞானம். இதில் கோலம், பஜனை, பொங்கல், இசைவிழாக்கள் இவை எப்படி வந்தன?
ஆண்கள் வெளியில் நடந்து சென்று வீதிபஜனை செய்வதால் அதன் பலனைப் பெறுகிறார்கள். அக்காலப் பெண்கள் விடிகாலை வேளையில் வீதிகளில் பஜனை செய்வது யோசிக்க முடியாத விஷயம். அவர்களும் பலன் பெற உருவானதே வாசலில் கோலம் போடும் வழக்கமானது. அந்நாளில் அத்தனையும் தனி வீடுகள். அகன்ற பெரிய மண்தரை வாசல்கள். அவற்றில் சாணி கரைத்து தெளித்தால் பச்சையும் பிரவுனும் இணைந்த அழகிய வண்ணம்! அதில் பளிச்சென்ற கண்களைப் பறிக்கும் அழகில் அரிசிமாக்கோலம்.
இதில்தான் எத்தனை பயன்கள்! பூலோகம் வரும் தேவர்களுக்கு வரவேற்பு! கோலம் போடும் பெண்களுக்கு உடற்பயிற்சியுடன் ஓஸோனால் கிடைக்கும் பலன்! வீதிவலம் வருவதால் ஆண்க
ளுக்கு இறையருளுடன் நடைப்
பயிற்சி! கோலம் என்ற அழகான கலையின் வளர்ச்சி! தெய்வங்கள் கூட மார்கழியில் பிஸி! நமக்கு அருளை வாரிவழங்க விடியலில் நமக்காக வழிமீது விழி வைத்து காத்திருக்கும் தெய்வங்
கள்! தினமும் நீலமேக வண்ணனுக்கும் , நாகம் பூண்ட நமச்சிவாயருக்கும் சுடச்சுட பொங்கல் நிவேதனம்!

No comments:
Post a Comment