தினம் தினம் கேட்டாலும் தெவிட்டாத பாடல்களும், இனிய குரல்களும் நம்மை மார்கழி உற்சவத்தில் ஈடுபடவைக்கும். பல வருடங்களுக்கு முன்பே சபாக்கள் இருந்தும், அவற்றில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகள், உரிய வரைமுறைப்படுத்தாமல் இருந்தது.
மியூஸிக் அகாடமியின் ஆதரவாளர்களாக இருந்தவர்களில் பலரும் வழக்குரைஞராக பணியாற்றினர். மார்கழி மாதமான டிசம்பர் மாத இறுதியில் அவர்களுக்கு விடுமுறைக் காலமாக இருந்ததால் அச்சமயம் இசை நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்தனர். இதன் பொருட்டே சென்னை இசை விழா டிசம்பர் மாத இறுதியில் நடைபெறுவதாக சொல்லப்
படுகிறது.
இப்படித் தொடங்கிய விழா இன்று சென்னையின் அடையாளத்தைக் குறிப்பதுடன் நமது முக்கிய கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. ஏறத்தாழ
100 சபாக்களில் 500 க்கும் அதிகமான கர்நாடக இசைக்கலைஞர்கள் தங்களது இனிய குரல்களாலும், வாத்தியங்கள் மூலமும் இசை அமிர்தத்தை இன்பமாகப் பொழிகிறார்கள். கடுங் குளிரிலும் இந்த இசைச் சாறலில் நனைய வெளிநாட்டிலிருந்து கூட அதிகம் பேர் இங்கு வருகிறார்கள்.
இசை ரசிகர்களின் விருப்பத்துக்
கிணங்க சபாக்கள் இலவச
மாகவும், கட்டணத்துடனும் காலை 11 மணிக்கே கச்சேரிகளைத் தொடங்குகின்றன. இரவு 10 மணிவரை நீளும் இக்கச்சேரி
களை இடைவிடாமல் ரசிகர்கள் கேட்கும் விதத்தில் ஹரிகதை, வாத்தியம், வாய்ப்பாடு, பரதம், கதக், குச்சிபுடி, மோகினியாட்டம் என கர்நாடக இசையின் அனைத்து வடிவங்களும் ரசிகர்களுக்கு இசை விருந்தாக்கப் படுகின்றன. இவற்றில் இந்துஸ்தானி இசை நிகழ்வுகளும் உண்டு. நாடகங்களும், இசை ஆராய்ச்சிக்குரிய விவாதங்களும் இந்த இசை விழாவில் அடக்கம்.
இசைவிழா உருவாக மற்றொரு காரணமும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment